ஊழலில் திளைக்கும் உலகின் டாப் 10 நாடுகள்!

ஊழல் மற்றும் லஞ்சத்தில் உலகின் பல்வேறு நாடுகள் திளைத்து வருகின்றன. எந்த நாட்டில் ஊழல் அதிகரித்துக்கொண்டு போகின்றதோ அதன் அடிப்படையில் அந்நாட்டில் வாழ்ந்து வரும் மக்கள் வறுமையில் தள்ளப்பட்டு, வறுமையின் சதவீதம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். அதன்படி, Transparency International எனும் அரசுசாரா அமைப்பு ஒன்று, ஊழல் மற்றும் லஞ்சத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் உலகின் டாப் 10 நாடுகளை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது.

சோமாலியா: பாதுகாப்பற்ற நாடாகவும் ஊழலின் உச்சத்தை தொட்ட நாடாகவும் திகழும் சோமாலியா, இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு சட்ட விரோதமான செயல்கள் அதிகமாக நிகழும் நிலையில், அதற்கு உடன்போகும் அரசு அதிகாரிகள் அதிகளவில் லஞ்சம் வாங்குகின்றார்கள். இங்கு எல்லா துறையிலுமே ஊழல் நடக்கின்றது.

வட கொரியா: சர்வாதிகாரி கிம் ஜாங் ஆளும் வட கொரியா 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நாட்டின் பொருளாதாரம் மிகவும் மர்மமாகவே உள்ளது. நாட்டு மக்களுக்கு தேவையான உணவுகளை கூட சரியாக வழங்க முடியாத அரசாங்கமாக உள்ளது இந்த நாட்டு அரசாங்கம். பல்வேறு நாடுகளில், நேர்மையாக பணிபுரியிம் அரசு அதிகாரிகளு நல்ல ஊதியம் வழங்கப்படும். ஆனால் இங்கு அப்படி இல்லை. அதனால், அதிகாரிகள் அதிகளவில் ஊழலில் ஈடுபடுகின்றார்கள்.

ஆப்கானிஸ்தான்: போதை பொருளான ஹெராயின் உற்பத்தியில் மிகப்பெரிய இடத்தைக் கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹமித் கர்சாய் மோசமாக ஊழல் செய்து அதில் சிக்கி கொண்டவர் ஆவார்.

சூடான்: முழுமையாக ஊழலில் சிக்கித் தவிப்பது இந்த நாடு மட்டும்தான். இப்படி ஊழலில் சிக்கித் திளைக்கும் சூடானை ஆளுவது சூடான் தேசிய காங்கிரஸ் இயக்கமாகும். எல்லா துறையிலும் ஊழல் நடந்தாலும், அதிகளவில் போலிஸ் துறையில் ஊழல் நடக்கின்றது.

தென் சூடான்: கடந்த 2011ல் சுதந்திர நாடாக உருவெடுத்த தென் சூடானில் பாரம்பரியமான அரசாங்க கட்டமைப்புகள் இல்லாததால் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளுக்கு ஊழல் செய்ய வாய்ப்புகளை அது ஏற்படுத்தியுள்ளது.

அங்கோலா: எண்ணெய் உற்பத்தியில் சிறந்த நாடாக இருந்தாலும், அங்கோலாவின் அரசாங்க அதிகாரிகள் அதிகளவில் நாட்டின் சொத்துக்களை சொந்தமாக்கி ஊழலில் ஈடுபடுகின்றார்கள்.

லிபியா: அதிகளவு போராட்டங்கள் நடப்பதாக அறியப்படும் இந்நாட்டில் இராணுவ துறையில் மிகப் பெரிய அளவில் ஊழல்கள் நடைபெறுகின்றன.

ஈராக்: ஈராக்கின் பரந்த செல்வம் மற்றும் இயற்கை வளங்கள் அனைத்து வகையான தொழில்துறைக்கும் உகந்ததாக இருந்தாலும் ஊழலும் அதிகளவு இங்கு நடக்கின்றது.

வெனிசுலா: எண்ணெய் வளத்தில் சிறந்து விளங்கும் வெனிசுலாவில், நாட்டுக்கு கிடைக்கும் வருமானமானது மக்களின் நலன்களுக்கு செல்லாமல் உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு தான் அதிகம் செல்கின்றது.

கினி-பிஸ்ஸாவ் (Guinea-Bissau): அதிகம் அறியப்படாத கினி-பிஸ்ஸாவ் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடாகும். அதிகளவில் குற்ற செயல்கள் நடக்கும் இங்கு ஊழலும் அதிகமாக உள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*