தினகரன் அட்டாக்: விழிபிதுங்கும் எடப்பாடி குரூப்!

அதிமுக மூன்று அணியாக செயல்பட்டு வந்தது உலகறிந்த விஷயம். தினகரன் ஆகஸ்ட் 5 -ம் தெதி கெடுவிதித்ததோடு திட்டத்தை மாற்றி கட்சியினரை சந்திக்க சுற்றுப்பயணம் செல்ல முடிவெடுத்தோடு பதவிகளை வாரி வழங்கு கட்சியை சிதறிடித்து விட்டார். இப்போது பதவியில் இருக்கும் எம்.எல்.ஏக்களில் யார் யார் தன்னோடு இருக்கிறார்கள். என்றே எடப்பாடி பழனிசாமிக்கு அணியினருக்கு தெரியவில்லை.
ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டியாளர்கள் யார் என்பதை தெரிந்து கொண்டு பதவி கொடுத்து தினகரன் சீவிய கொம்பில் திக்குமுக்காடி விட்டது பழனிசாமி கோஷ்டி. இப்போது ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு விலை நிர்ண பேரம் நடந்து வரும் நிலையில் இந்த சூழலை பயன்படுத்திக் கொள்ளும் அதிமுக பிரமுகர்கள் தங்கள் ரேட்டை ஏகத்திற்கும் ஏற்றிச் செல்கிறார்கள். இதுவரை பன்னீர்செல்வம் தான் போட்டியாளர் என்று நம்பிக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி குழுவினர். தினகரன் , சசிகலா குழுவினர் பாஜகவுக்கு பயந்து கட்சியில் இருந்து ஒதுங்கி விடுவார்கள் என்றே நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அது பற்றி கவலைப்படாமல் களமிரங்கியிருக்கும் தினகரனுக்கு பழனிசாமியை விட ஆதரவு பெருகி வருவதுதான் வேடிக்கை!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*