மிகக் குறைந்த நேரமே உறங்கும் இந்தியர்கள்

உலகிலேயே, இந்தியாவில் வசிக்கும் மக்கள் தான் சராசரியாக ஒரு நாளைக்கு 6.55 மணி நேரம் மட்டும் உறங்குவதாக, அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஃபிட்பிட் என்ற உடல்நல ஆலோசனை வழங்கும் நிறுவனம் ஒன்று உறக்கம் பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில், அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், உலக அளவில் மொத்தம் 18 நாடுகளைச் சேர்ந்த மக்கள், மிகக் குறைவான நேரம் உறங்குவதாகத் தெரியவந்துள்ளது.

அந்த 18 நாடுகளில், ஜப்பான் நாட்டு மக்களே முதலிடத்தில் உள்ளனர். சுறுசுறுப்புக்கு பெயர் பெற்ற ஜப்பானியர்கள், நாளொன்றுக்கு, சராசரியாக, 6.35 மணிநேரம் மட்டுமே உறங்குகின்றனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதற்கடுத்தப்படியாக, 2-வது இடத்தை இந்தியர்கள் பிடித்துள்ளனர். இந்தியர்கள் நாள் ஒன்றுக்கு 6.55 மணிநேரம் மட்டுமே உறங்குவதாகத் தெரியவந்துள்ளது. இந்தியர்களிடையே உடல்நலம் பராமரிப்பதில் போதிய அக்கறை இல்லை எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், வேலைப்பளு, உணவுப் பழக்க வழக்கம் உள்ளிட்டவை காரணமாக, அவர்கள் மிகக்குறைவான நேரமே உறங்குவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாட்டின் மக்கள் சராசரியாக, நாள்தோறும் 7 மணிநேரத்திற்கும் மேலாக உறங்குகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாட்டினரே, உலக அளவில், நீண்ட நேரம் அதாவது, 8 மணிநேரத்திற்கும் மேலாக, சராசரி உறக்கத்தைக் கொண்டுள்ளதாகவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பசி, உறக்கம், உடல் பராமரிப்பு, உணவுப்பழக்கம் உள்ளிட்டவையே ஒரு மனிதனின் வாழ்நாளை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால், நாம் சராசரியாக 8 மணிநேரம் உறங்க வேண்டியது அவசியம்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*