மின்சாரத்திலிருந்து உணவு

மின்சாரத்தினை பிரதானமாகக் கொண்டு புதிய உணவினை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

Lappeenranta University of Technology (LUT) மற்றும் VTT Technical Research Centre of Finland ஆகிய ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த புதிய கண்டுபிடிப்பினை மேற்கொண்டுள்ளனர்.

இந்த உணவானது இரவு உணவினை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மின்சாரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட இந்த ஒரு வேளை உணவுச் செயல்முறைக்கு நீர், காபனீரொட்சைட்டு மற்றும் சில நுண்ணுயிர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நீர், காபனீரொட்சைட்டு மற்றும் சில நுண்ணியர்களுடன் சேர்த்து குறிப்பிட்ட அளவு மின்சாரத்தினை பாய்ச்சும்போது 50 சதவீதம் புரதமும், 25 சதவீதம் கார்போஹைட்ரேட்டும் அடங்கிய உணவு உற்பத்தியாகின்றது.

மிகவும் குறைந்த சக்தியைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் இவ் உணவானது ஏற்கனவே பரிசோதனை முயற்சியில் இருக்கக்கூடிய ஆய்வுகூட இறைச்சி உற்பத்தி மற்றும் உணவுக்கான பூச்சி பண்ணை உருவாக்கம் என்பவற்றிற்கு சிறந்த மாற்றீடாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*