முதல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய்?

முதல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், ரகுவரன் மற்றும் மனிஷா கொய்ராலா நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 1999ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அரசியல் சம்பந்தப்பட்ட படம் முதல்வன். தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை ராஜமௌலியின் தந்தையும், எழுத்தாளருமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதி வருவதாகவும் அதனை ஷங்கர்தான் இயக்கவேண்டுமெனவும் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் கூறியிருந்தார். தற்போது கதை நிறைவடையும் நிலையிலுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில்  கதாநாயகனாக நடிக்கப்போவது யாரென்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. முதல்வன் படத்தின் முதல் பாகத்தில் நடித்த அர்ஜூனே இந்த படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்புகள்  குறைவெனவும் தற்போதைய சூழலில் அரசியலில் கால் பதிக்க விரும்பக்கூடியவர்களான ரஜினி அல்லது விஜய்தான் இப்படத்தில் நடிப்பார்கள் என்றும் கூறப்பட்டது. அப்படித்தான் கோடம்பாக்க வட்டாரமும் கூறி வருகிறது. ஆனால் இதுகுறித்த உறுதியான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘மெர்சல்’ படத்திற்கும் கதையாசிரியர் கே.வி.விஜயேந்திர பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*