ராகுலைக் கொல்ல சதி:லாலு குற்றச்சாட்டு!

பாரதீய ஜனதாவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை ஒலை செய்ய முயல்வதாக ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றம் சுமத்தியுள்ளார்.குஜராத் வெள்ள சேதத்தை பார்வையிடச் சென்ற ராகுல் காந்தி கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அதிர்ஷடவசமாக அவர் தப்பிய நிலையில் கல்வீசிய வழக்கில் உள்ளூர் பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்நிகழ்வு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதிபலிக்க அவை நாள் முழுக்க ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ்:-
“ பாரதீய ஜனதாவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் ராகுல்காந்தியை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுகின்றனர். அதன் ஒரு முயற்சிதான் குஜராத்தில் நடந்தது. அவர்கள் ராகுல்காந்தியை குறி வைத்துவிட்டார்கள்” என்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*