சகாயத்துக்கு கொலை மிரட்டல்:உயர்நீதிமன்றத்தில் புகார்!

தமிழகத்தின் நேர்மையான அதிகாரிகளில் ஒருவர் சகாயம். ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியான நேர்மையாக பணி செய்ததால் அரசியல்வாதிகளின் பகையை சம்பாதித்ததோடு அரசால் பல இடங்களுக்கும் பந்தாடப்பட்டவர். ஆனாலும் தன் நேர்மை தவறாமல் பணி செய்து வருகிறார். கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரித்த அவருக்கும் சேவற்கொடியோனுக்கும் சமீபத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக பேசிய அவர் “மிரட்டலுக்கு உள்ளான சேவற்கொடியோனுக்கு பாதுகாப்பு வழங்கவும், விபத்தில் மரணமடைந்த மற்றொரு நபர் குறித்து விசாரிக்கவும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிரானைட் முறைகேடு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவே ஆகஸ்ட் இறுதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*