டிரம்புக்கும் மோடிக்கும் ரக்ஷாபந்தன் பாசக்கயிறு

ரக்ஷாபந்தன் என்பது இந்தியாவில் சகோதர சகோதரிகளுக்கிடையே கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். என்னதான் சகோதர சகோதரிகளுக்கிடையே பெரிய போர் வெடித்திருந்தாலும் இந்த நாள் அவர்களுக்கு ஒரு முக்கிய நாளாகும். இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு விழாவில் இதுவும் ஒன்றாகும். சகோதரத்துவ பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தியாவில் ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுகின்றது என்று கூட சொல்லலாம்.

இன்று கொண்டாடப்படும் இந்த ரக்ஷாபந்தனை முன்னிட்டு டெல்லியின் Gurugram நகரில் உள்ள Marora என்ற கிராமத்து பெண்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தங்களுடைய மூத்த சகோதரர் என்று தெரிவித்து அவருக்கு 1001 ராக்கி கயிறுகளை அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த கிராமம் மிகவும் பின்தங்கிய கிராமம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அரசு சாரா NGO அமைப்பு ஒன்று தான் இந்த கிராமத்திற்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த அமைப்பு அங்கு வசிக்கும் பெண்கள் முதற்கொண்டு குழந்தைகள் வரைக்கும் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றது.

மேலும், இந்த கிராமத்து பெண்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குக் கூட 501 ராக்கி கயிறுகளை அனுப்பியுள்ளனர். இந்த கிராமத்துக்கு உதவி செய்யும் அரசுசாரா NGO அமைப்பின் மூலம் இந்த கயிறுகள் வெள்ளை மாளிகையை சென்றடைந்துள்ளன.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*