பேராசிரியர் ஜெயராமனுக்கு நிபந்தனை ஜாமீன்!

கதிராமங்கலம் போராட்டத்தின் போது கைதான பேராசிரியர் ஜெயராமனுக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருக்கிறது.

கதிராமங்கலம் கிராமத்திலிருந்து ஒஎன்ஜிசி முற்றிலுமாக வெளியேறக் கோரி கடந்த ஜூன் 30-ஆம் தேதி  கதிராமங்கலம் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் காவல்துறையினர் அந்த போராட்டத்தை கலவரமாக மாற்றி மக்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் குழு தலைவர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் மீது பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஓஎன்ஜிசி நிறுவனம் வழக்கும் தொடர்ந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 10 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென்றும், அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டுமென்றும் கதிராமங்கலம் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர் இதனையடுத்து இவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தஞ்சை நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் பேராசிரியர் ஜெயராமனின் தந்தை காலமானதால் அவருக்கு பரோல் வழங்கி மதுரை உயர் நீதிமன்றம் கிளை உத்தரவிட்டது.இதனைத் தொடர்ந்து 10 பேரின் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றம் பேராசிரியர் ஜெயராமன் தவிர மீதமுள்ள 9 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில், பேராசிரியர் ஜெயராமன் உட்பட 8 பேருக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருக்கிறது. மேலும் திருவிடைமருதூர் வட்டாட்சியர் அளித்த புகாரிலிருந்தும் ஜெயராமன் உட்பட 8 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு நிபந்தனையாக ஜெயராமன் தினமும் மதுரை நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டுமென்றும் அவரை தவிர 7 பேரும் திருச்சி நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட வேண்டுமென்றும் உத்தரவிட்டு ஜாமீன் வழங்கியிருக்கிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*