போபால்: குழந்தைகள் முகத்தில் முத்திரை குத்திய சிறை அதிகாரிகள்?

ரக்‌ஷா பந்தன் அன்று (ஆகஸ்ட் 7) போபால் மத்திய சிறையில் இருக்கும் தன் உறவினரை சந்திக்க சென்ற குழந்தைகளின் முகத்தில் அடையாள முத்திரையிட்டுள்ளனர் போபால் சிறை அதிகாரிகள். இந்த புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அனைவரும் இதற்கு எதிர்ப்பு
தெரிவித்துள்ளனர்.

‘Naidunia’ எனும் இணையதள பத்திரிகையின் மூலமாக இந்த செய்தி மனித உரிமை ஆணையத்துக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, மத்திய பிரதேச மனித உரிமை ஆணையம், இந்த செயல் மனித உரிமை மீறல் என போபால் சிறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கமளிக்கும்படி கேட்டுள்ளனர். ஆனால் இதுகுறித்து போபால் மத்திய சிறை கண்காணிப்பாளர் தினேஷ் நர்கவ், “இது திட்டமிட்ட செயலல்ல, எதிர்பாராத விதமாக நடந்த ஒன்று. கைதிகளை சந்திக்க வரும் பார்வையாளர்களின் கைகளில் முத்திரை குத்துவது வழக்கம். பார்வையாளர்கள் கைதிகளுடன் கலந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் முகத்தில் முத்திரை பதிக்கும் செயலை திட்டமிட்டு செய்திருந்தால் அது தவறான செயலாகும். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

எனினும் இந்த சம்பவம் பற்றிய முழுமையான விளக்கத்தை, இன்னும் ஒரு வாரத்துக்குள் அளிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

நன்றி: The wire

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*