ஆஸ்திரேலியாவில் எந்த மாநிலத்தில் குடியேறுவது சிறந்தது?

ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயரும் பலர் எந்த மாநிலத்தில் வாழ்வது என்பது தொடர்பில் முடிவெடுக்க முடியாமல் குழம்புவதுண்டு.

பொருளாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் எந்த மாநிலத்தில் சிறப்பாக உள்ளது என்பது தொடர்பில் பலரும் ஆராய்வது வழக்கம்.

இந்தநிலையில் ஆஸ்திரேலிய மாநிலங்களில் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் மாநிலமாக நியூ சவுத் வேல்ஸ் திகழ்கிறது என CommSec-இன் State of the States அறிக்கை தெரிவிக்கிறது.

இவ்வறிக்கையின்படி வர்த்தக முதலீடு, கட்டுமானப்பணிகள், வேலையற்றோர் வீதம், சனத்தொகை வளர்ச்சி உள்ளிட்ட 8 அம்சங்களின் அடிப்படையில் நியூ சவுத் வேல்ஸ் முதலிடத்திலும் விக்டோரியா இரண்டாமிடத்திலும் ACT மூன்றாமிடத்திலும் உள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலமாக மேற்கு ஆஸ்திரேலியா 8ம் இடத்தில் காணப்படுகின்றது.

CommSec அறிக்கையின் முழுமையான விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

1. நியூ சவுத் வேல்ஸ்

2. விக்டோரியா

3. ACT

4=. டஸ்மேனியா

4=. குயின்ஸ்லாந்து

6. தெற்கு ஆஸ்திரேலியா

7. நொதேர்ன் டெரட்டரி

8. மேற்கு ஆஸ்திரேலியா

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*