இந்தியாவின் ஐ.எஸ் ஆர்.எஸ்.எஸ்: அச்சுறுத்தும் வீடியோ!!

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் தனிமனிதர் மீதான கும்பல் தாக்குதல்கள் பண்பாடு, இனம் மற்றும் சில காரணிகளை முன்வைத்து தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. இந்த வரிசையில், சில நாட்களுக்கு முன்பு ஏதோ ஒரு இந்தி பேசும் மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் ஒரு இளைஞனது முகத்தை மூடி ஆள் நடமாட்டமில்லாத பகுதியிலுள்ள ஒரு கட்டடத்தில் வைத்து அடித்து உதைத்துக் கொண்டே வீடியோவில் பேசுகிறார். அதனை ஒரு நபர் வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறார். சமூகத்தில் அச்சுறுத்தலையும் மிரட்டலையும் வெளிப்படுத்துவதே இந்த விடியோவின் நோக்கமாக இருக்கலாம்.

அந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் இந்த சம்பவத்திற்கு முன்பாக எதையோ பேசி வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். அதனை சிலர் கிண்டல் செய்துள்ளனர். அதில் ஒருவர் தான் வீடியோவில் முகம் மூடியநிலையில் கதறிக்கொண்டும் கெஞ்சிக்கொண்டும் அடிவாங்கும் இளைஞன். தனியாக அவர்களிடம் மாட்டிக்கொண்ட அந்த இளைஞனை பின்வருமாறு கூறிக்கொண்டே அந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் தாக்குகிறார்.

அதாவது, “நீங்கள் எல்லாம் எப்போதும் எங்களுக்கு கீழ் தான். நீ ஒன்றும் புலி கிடையாது. நீ ஒரு பன்றி. எது செய்தாலும் உன் வீட்டுடன் வைத்துக்கொள். எங்களிடம் வைத்துக்கொள்ளாதே. இனிமேல் இப்படி செய்வியா? இப்போது இந்த வீடியோவை போடுகிறேன். இப்பொழுது என்ன செய்ய முடியும்” என்று கூறி மேலும் சில தகாத வார்த்தைகளை பேசியவாறு தொடர்ந்து தாக்கிக் கொண்டேயிருக்கிறார்.

இதற்கு முன் அவர் என்ன பேசி வெளியிட்டார். அடிவாங்கும் இளைஞர் என்ன கிண்டல் செய்தார். காவல்துறை இந்த சம்பவத்தல் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுத்ததா? என்பது பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*