இந்தியாவில் சிகிச்சை பெற்ற பாகிஸ்தான் குழந்தை மரணம்!!

இந்தியாவில் அறுவைசிகிச்சை மேற்கொண்ட பாகிஸ்தான் குழந்தை தீடிரென உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த கன்வால் சித்திக் என்பவரின் குழந்தை ரோஹன் ஆவார். ஐந்து மாத குழந்தையான ரோஹனுக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது. பாகிஸ்தானில் இதற்கேற்ப சிகிச்சை இல்லாததால் குழந்தையின் தாயார் இந்தியாவின் உதவியை நாடினார். ஆனால், அவருக்கு விசா மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களை டுவிட்டரில் தொடர்புகொண்டு உதவி கேட்டார். அதனையடுத்து, சுஷ்மா சுவராஜ் தலையிட்டு அவருக்கு விசா வாங்கி கொடுத்தார்.

இந்தியாவின் நொய்டாவில் உள்ள ஜெய்பி மருத்துவமனையில் கடந்த மாதம் 14ம் தேதி ரோஹனுக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் ஐந்து மணிநேரம் நடந்த சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தனர். அறுவைசிகிச்சையை முடித்து சில வாரங்களுக்குப் பின் தன் மகன் பூரண குணமடைந்ததை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்த தாயார் சித்திக், சுஷ்மா சுவராஜுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

சித்திக் மகிழ்ச்சியாக பாகிஸ்தான் திரும்பிய நிலையில் ரோஹன் நேற்று இறந்துவிட்டதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*