தினகரனிடமிருந்து பழனிசாமியிடம் தாவிய சரத்குமார்

டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் திடீரென்று எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்தார்.

அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்த போது சரத்குமார் சசிகலாவின் ஆதரவாளராக இருந்தார். சசிகலா சிறைக்கு சென்ற பிறகு கட்சியின் துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரனின் ஆதரவாளராக தொடர்ந்தார். தினகரன் ஆதரவாளராக இருந்ததால் ஆர்.கே.நகர் தேர்தல் பணப் பட்டுவாடா விவகாரத்தில் சரத்குமாரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தும் அளவுக்கு சென்றது. அதன்பிறகும் சரத் குமார் டிடிவி தினகரனுக்கு அளித்த ஆதரவை விலக்காமல் இருந்தார்.

இந்நிலையில், திடீரென்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து பேசினார். அவருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடனான  சந்திப்பு மரியாதை நிமித்தமானது மட்டுமே என்றும்  வேறு எந்த காரணமும் இல்லை என்றும் தெரிவித்தார். அதிமுகவில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் ஆட்சியைத் தொடர வேண்டும் சரத்குமார் கூறினார்.

இந்த சந்திப்பு மரியாதை நிமத்தமானது என்று சரத்குமார் கூறினாலும், டெல்லியின் முழு ஆதரவும் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கே இருக்கிறது. மேலும் சமீபத்தில் டிடிவி தினகரன் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை அறிவித்து அதிரடி காட்டினார். இதனால் டிடிவி தினகரனின் அதிரடியை கட்டுப்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருமான வரித்துறையை ஏவலாம் என்றும் எனவே இனியும் டிடிவி தினகரனின் ஆதரவாளராக இருந்தால் மற்றுமொரு வருமான வரித்துறை சோதனையை சந்திக்க நேரிடும் என்று கருதிய சரத்குமார் எடப்பாடி பழனிசாமி அணிக்கு சென்று விடலாமென்று முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மிக விரைவில் சரத்குமார் அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமி அணியில் இணையவிருக்கிறார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*