பூமிக்கு வெளியே சூடான புதிய கிரகம் கண்டுபிடிப்பு

பூமியிலிருந்து 900 ஒளி ஆண்டுகள் தூரத்தில் வியாழன்(ஜூபிடர்) போன்ற மிகப்பெரிய சூடான கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் பல்வேறு விஞ்ஞான விசயங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றது. அதில் ஒன்றாக விண்வெளி பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டுவருகின்றனர். புதிய கிரகங்கள் முதற்கொண்டு தற்போது இருக்கும் கிரகங்களில் நடக்கும் மாற்றங்கள் வரை துல்லியமாக ஆராய்ந்து வெளியிடுகின்றனர். இந்நிலையில் தற்போது வியாழன் போன்றே மிகப்பெரிய சூடான கிரகத்தை பூமிக்கு வெளியே நாசா கண்டுபிடித்துள்ளது.

இந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் செயற்கைக்கோள் புகைப்படங்களில் தெரிகின்றன. ஆனால் அந்த நீரானது இரும்பை கொதிக்க வைக்கும் அளவுக்கு திறனுடையது அல்ல எனவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த கிரகத்துக்கு WASP 12B என பெயர் வைக்கப்பட்டுள்ளது, இதை சூடான வியாழன் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். மிக சூடான கிரகம் என்பதால் அதன் வளிமண்டல அடுக்கிலிருக்கும் நீராவி பளபளப்புடன் தோற்றம் தர வாய்ப்புள்ளது.

இந்தக் கோள் முதன்முறையாக நாசாவின் ‘ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்’’ மூலமாகத் தான் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தக் கிரகத்தில் உயிர்கள் வாழ போதுமான அளவில் தண்ணீர் இல்லை. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த கிரகத்தின் வளிமண்டல அடுக்குகளின் மீது விழும் ஒளியின் தாக்கத்தை அடிப்படையாக வைத்து மேலும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றது. இதோடு, ஸ்பெக்ட்ரோகோபி ஆய்வு மூலமாக புதிய கிரகத்தின் வளிமண்டல அடுக்குகளில் வித விதமாக ஒளி அலைகளை பாய்ச்சி அதன் விளைவாக கிரகத்தில் ஏற்படும் மாற்றங்களையும் விஞ்ஞானிகள் உற்று கவனித்து வருகிறார்கள்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*