மருத்துவ முத்தம் பற்றிய சில உண்மைகள்!

முத்தம் என்பது அன்பையும் பாலியல் பரிமாற்றத்தையும் வெளிப்படுத்தும் அற்புதமான உணர்வு. ஆனால் முத்தமானது மருத்துவ ரீதியாக பல இரசாயன மாற்றங்களை நம் உடலினுள் நிகழ்த்துகின்றது என ஆய்வுகள் பல கூறுகின்றது. 19-ம் நூற்றாண்டில் முத்தம் பற்றிய பிலிமெட்டாலஜி (Philematology) எனும் படிப்பு அறிமுகமானது.

இது குறித்த ஆராய்ச்சியில், சராசரியாக ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 20,160 நிமிடங்கள், அதாவது 2 வாரங்கள் முத்தமிடுவதற்கு செலவிடுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

முத்தமிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

1) அன்பை வெளிப்படுத்தும் முத்தம், நம் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வலி நிவாரணியாக பயன்படுகின்றது.
2) முத்தமிடும் போது, ஒரு நொடிக்கு நான்கு கலோரிகள் வரை உடலில் எரிக்கப்படுகிறது. மேலும், இதனால் உடல் மற்றும் மனம் சார்ந்த நலன்கள் முத்தமிடுவதால் கிடைக்கின்றது என்று ஆய்வு கூறுகிறது.
3) முத்தம் என்பது உதடு சார்ந்த செயல். ஆனால் முத்தமிடும் போது, உங்கள் உடலின் 146 தசைகளும் ஒருங்கிணைக்கப்படுகிறது. முகத்தில் உள்ள 34 தசைகள் மற்றும் 112 புற தசைகள் செயல்படுகின்றது.
4) முத்தமிடும் போது உடலில் இருந்து அட்ரீனலின் மற்றும் நோரடனினலின் ஆகிய ஹார்மோன்கள் சுரக்கின்றது. இதனால் இதயத்துடிப்பு அதிகரித்து, நம் உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் ஆற்றல் கிடைக்கின்றது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*