9 வயது சிறுவனின் ‘’ஏலியன்’’ கடிதம்

நாசாவின் பூமியைப் பாதுகாக்கும் வேலைக்கு 4-ம் வகுப்பு பயிலும் 9 வயது ஜேக் டேவிஸ் என்ற அமெரிக்கச் சிறுவன் அனுப்பிய விண்ணப்பக் கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் Gliese 832c என்ற புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். அங்கு வேற்றுகிரகவாசிகள் வசிக்கலாம் என்று கூறப்படுவதால், அது தொடர்பான ஆய்வுகள் மேலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றநிலையில், ஏலியன்களிடமிருந்து பூமியைப் பாதுகாப்பதற்கான பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், நாசாவின் பூமியைப் பாதுகாக்கும் வேலைக்கு அமெரிக்காவைச் சேர்ந்த 9 வயது சிறுவனான ஜேக் என்பவர் ஒரு விண்ணப்பக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளான். அந்தக் கடிதத்தில், ‘’எனது பெயர் ஜேக் டேவிஸ். பூமியின் பாதுகாவலன் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகின்றேன். எனக்கு 9 வயது மட்டுமே ஆகியிருக்கலாம். ஆனால், நான் இந்தப் பணிக்கு பொருத்தமாக இருப்பேன் என்று நினைக்கிறேன்.

’’ஏலியன்’’ என்றே எனது சகோதரி என்னை அழைப்பதும் அதற்கான காரணங்களுள் ஒன்று. இதுதவிர, விண்வெளி மற்றும் ஏலியன் தொடர்பாக வெளியாகியுள்ள அனைத்துப் படங்களையும் நான் பார்த்துள்ளேன். மேலும், மார்வெல் ‘ஏஜென்ட்ஸ் ஆஃப் ஷீல்டு’ சீரியல்களையும் தவறாமல் பார்த்து வருகின்றேன். ‘மென் இன் பிளாக்’ படத்தையும் பார்த்துவிடுவேன் என்று நம்புகின்றேன். வீடியோ கேம்ஸ் விளையாட்டுகளில் நான் சிறந்து விளங்குகிறேன். நான் இளமையாக இருப்பதால் ஏலியன்கள்போல சிந்திக்கக் கற்றுக்கொள்வேன் என்று நம்புகிறேன்’’ என ஜேக் டேவிஸ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த விண்ணப்பக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

ஆராய்ச்சியாளரான ஸ்டீபன் ஹாவ்கிங், வேற்றுகிரகவாசிகள் குறித்துத் தெரிவிக்கையில், ‘’நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நம்மைப்போன்று, ஏலியன்களும் ஒரு புதிய இடம் தேடிக்கொண்டிருக்கும்’’ என தெரிவிரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*