அண்டார்டிகாவில் உடையும் பனிப்பாறை – ஆபத்தில் உலகம்

உலகின் மிகப்பெரிய பனிப்பாறையின் பிளவுப் புகைப்படங்கள் செயற்கைக்கோள் மூலம் படம்பிடிக்கப்பட்டு சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை மாதம் ஆரம்பத்தில், அண்டார்டிக்காவின் லார்சன் சி பிரதேசப் பனிப்பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய பனிப்பாறையில் மாபெரும் பிளவு ஒன்று ஏற்பட்டிருந்தநிலையில், அந்த பனிப்பாறையின் பிளவுகள் தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

உலகத்தின் மிகப்பெரிய இந்த பனிப்பாறைக்கு ’’A-68’’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பனிப்பகுதி திறந்த கடல் பகுதியை பல ஆண்டுகளாக சுற்றி வளைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த பனிப்பாறை 5,800 சதுர கிலோமீட்டர் (2,240 சதுர மைல்கள்) அளவைக் கொண்டுள்ளது. அதன் நீளம், Erie என்ற ஏரியை இரண்டுக்கும் மேற்பட்ட முறை நிரப்ப போதுமானதாக இருக்கும் அல்லது லண்டன் போன்று நான்கு மடங்கு பரப்பளவில் பெரிதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

அது அண்டார்டிக்காவின் மிகவும் குளிரான நடுப்பகுதியில் இருப்பதால், பனிப்பாறைகளின் தெளிவான புகைப்படங்களை பெறுவதற்கு விஞ்ஞானிகள் போராடியுள்ளனர். இதனால் அவர்கள் இதுவரை, Sentinel-1 போன்ற துருவ செயற்கைக்கோள்களை நம்பியிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். தடிப்பான மேகத்தின் ஊடாக பார்ப்பதற்கு ரேடார் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், ஜுலை மாதம் இறுதியில் ஒரு சில நாட்கள் தெளிவான வானிலை காணப்பட்டுள்ளது. இதனால், Deimos -1 மற்றும் Deimos -2 ஆகிய செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப கிழக்கு அண்டார்க்டிக் தீபகற்பத்தில் ஒரு தெளிவான, ஒளிக் காட்சி புலப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் வெளியாகியுள்ள புதிய புகைப்படங்களால் பிளவுகள் அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்டார்க்டிக் தீபகற்பம் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் அதன் பகுதியின் 10 சதவிகிதத்தை இழந்துள்ளதாக விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

புகைப்படங்களின் மூலம் பிளவுகள் இன்னும் அதிகரித்து வருகின்றன என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலைமை தொடர்ந்தால் பனிப்பாறை உடைந்து போகும் சாத்தியம் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. A-68 பனிப்பாறையின் பிளவு ஏற்பட்டு முழுவதுமாக சரிந்தால் உலக கடல் மட்டம் மேலும் 4 அங்குலங்கள் (10 செ.மீ) உயரக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*