ஆரவ்-ஓவியா காதலுக்கு பெற்றோரிடமிருந்து சம்மதம்!!

திரையுலகில் வந்து பிரபலமாகி தனது நடிப்பால் சேர்க்காத ரசிகர்கள் கூட்டத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய இயல்பான குணத்தால் சேர்த்துள்ளார் ஓவியா. கடந்த வாரம் ஆரவ் மீது கொண்ட காதலாலும் பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களால் ஒதுக்கப் பட்டதாலும் மிகுந்த மனஉளைச்சலுக்குள்ளான ஓவியா தானாகவே நிகழ்ச்சியிலிருந்து விலகினார்.

நிகழ்ச்சியிலிருந்து வெளிவந்த பின்பு ரசிகர்களுடன் நேரம் செலவழித்து தற்போது நல்ல மனநிலையுடன் புதுகெட்டப்பில் திரும்பியுள்ள ஓவியா இன்னமும் ஆரவை நான் காதலிக்கிறேன் என கூறிவருகிறாராம்.

தமிழகமே இதனை பார்க்கும் போது ஆரவ் வீட்டிலிருப்பவர்களுக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்குமா. இது பற்றி ஆரவ்வின் அம்மா “ஆரவ் சொல்லிவிட்டால் போதும் ஓவியா தான் என் வீட்டு மருமகள்” என கூறியுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*