இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பில்லை : ஹமீது அன்சாரி

இந்தியாவில் தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்ற உணர்வு இஸ்லாமியர்களுக்கு  ஏற்பட்டுள்ளதாக குடியரசுத் துணைத் தலைவர்  ஹமீத் அன்சாரி  தெரிவித்துள்ளார்

கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் குடியரசு துணைத் தலைவராக இருப்பவர் ஹமிது அன்சாரி. அவரது பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. அவரையடுத்து பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வெங்கய்யா நாயுடு இன்று குடியரசு துணைத் தலைவராக பதவியேற்கிறார். ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி அவருக்கு நேற்று வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து அவர் ராஜ்யசபா தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில்,

நாட்டில் சகிப்பு தன்மை இன்மை நிலவுவது குறித்து, பிரதமருடன் பேசினேன்,  அப்போது என்ன பேசப்பட்டது என்பதை வெளியே கூறுவது தவறு. நாட்டில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் நாட்டின் கொள்கைகளை முறித்து விட்டன. தாங்கள் பாதுகாப்பாக இல்லை என முஸ்லிம்கள் கருதுவது உண்மைதான்.. இதை, நாட்டின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் நான் கேட்கிறேன். வட மாநிலங்களில் இப்பிரச்னை அதிகமாக உள்ளது. சகிப்புத்தன்மை என்பது நல்லொழுக்கம் தான். இருப்பினும், சகிப்பு தன்மையில் இருந்து ஏற்று கொள்ளுதல் என்ற நிலைக்கு செல்ல வேண்டும். சகிப்புத்தன்மை இன்மை மற்றும் பாதுகாப்பு என்ற பெயரில் இந்த நாட்டில் நடக்கும் வன்முறைகளால், தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்ற உணர்வு இஸ்லாமியர்களுக்கு  ஏற்பட்டுள்ளது என்று பேசினார்.

ஒரு நாட்டின் துணை குடியரசுத் தலைவராக இருந்தவரே இந்தியாவில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக இல்லை என்று உருக்கத்துடன் கூறியுள்ளார். இதனையடுத்தாவது மத்தியில் ஆளும் பாஜக அரசு மதச்சார்பின்மையை கடைபிடிக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மேலும் பசு காவலர்கள் என்று கூறிக்கொண்டு தொடர்ந்து இஸ்லாமியர்கள் மேல் நடத்தப்படும் தாக்குதல்களை தடுப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஆனால் ஹிந்துத்துவா சிந்தனையுள்ள பாஜக இஸ்லாமியர்களை பாதுக்காப்பதற்கான நடவடிக்கையை எடுப்பது சந்தேகமே என்றும் பல்வேறு தரப்பினர் கூறிவருகின்றனர்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*