குளிர்பானங்கள் ஆபத்தா??

நம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் இனிப்புகள் முதற்கொண்டு அமிலங்கள், வேதியல் கலவைகள் மற்றும் கலோரிகள் ஆகியவை இந்த குளிர்பானங்களில் அதிக அளவில் அடங்கியுள்ளது. இத்தகைய குளிர்பானங்களை தினமோ அல்லது அடிக்கடி குடித்து வந்தால், பல்வேறு உடல் பாதிப்புகளை சந்திக்கக்கூடும் என பல ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்தவண்ணமுள்ளன. எனினும், நாம் அவற்றை குடிப்பதை நிறுத்த முடியவில்லை. அப்படிப்பட்ட குளிர்பானங்களை குடிப்பதால் ஏற்படும் தீமைகளை கீழே பார்ப்போம்!!!

1) குளிர்பானங்களில் உள்ள ஹைபிரக்டோஸ்கார்ன் எனும் சிரப் பொருள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும். இதனால், நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

2) குளிர்பானம் குடிப்பதால் நம் உடலில் தேவைக்கு அதிகமான கலோரி சேரும், பின் அது கொழுப்பாக மாறி உடலிலேயே தங்கி, ஈரல் பாதிப்பை ஏற்படுத்தும்.

3) குளிர்பானங்களில் உள்ள காபின், பானத்தை குடித்ததும் அதிக சக்தி கிடைப்பது போன்ற நிலையை உருவாக்கி, தொடர்ந்து அதனை குடிக்கும் அளவுக்கு அடிமைத்தனத்தை ஏற்படுத்திவிடும்.

4) குளிர்பானத்தில் உள்ள காபின் அதிகமாக சிறுநீரை உருவாக்கும் தன்மைக் கொண்டது. அதனால் சிறுநீர் கழித்ததும் அதிக தாகம் மற்றும் உடலில் சோர்வு நிலையை உருவாக்கும்.

5) அடிக்கடி குளிர்பானத்தை குடிப்பதால், சிறுநீரகக் கற்கள், வயிற்று உப்புசம், வாயுத்தொந்தரவு, பசியின்மை, வயிற்றுவலி போன்ற பல்வேறு பிரச்சனைகள் தோன்றும்.

6) குளிர்பானங்களில் உள்ள அதிகளவு இனிப்புகள் பற்களை சேதமாக்கி, எலும்புகளில் உள்ள கால்சியத்தை பாதித்து, எலும்பு அடர்த்திக்குறைவு போன்ற நோய்களை ஏற்படுத்தும்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*