திருட்டு வழக்கில் கைது : ‘பிக் பாஸ்’ சுவாமி ஓம்

சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத சாமியார்களில் மிகவும் முக்கியமானவர் சுவாமி ஓம். தன்னை மனிதக் கடவுள் என கூறிக்கொள்ளும் சுவாமி ஓம், ஹிந்தி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் சக பெண் போட்டியாளரிடம் தவறாக நடந்துகொண்டதற்காக அடித்து துரத்தப்பட்டவர். அதேபோல் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதியன்று ஓர் பெண்மணி, சுவாமி ஓம் தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக புகார் அளித்திருந்தார். இப்படியாக சுவாமி ஓம் மீது இருக்கும் பல்வேறு வழக்குகளில் ஒன்று இந்த திருட்டு வழக்கு.

சுவாமி ஓம், கடந்த 2008-ஆம் ஆண்டு தனது தம்பி பிரமோத் ஜா-வுடைய சைக்கிள் கடையை உடைத்து 11 சைக்கிள்களை திருடியதற்கான வழக்கில் சிக்கியிருந்தார். 2016-ஆம் ஆண்டே இவர்தான் குற்றவாளி என அறிவித்து கைது செய்யும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டது சேக்கட் (டெல்லி) பகுதியில் உள்ள நீதிமன்றம். ஆனால் சுவாமி ஓம் நீண்ட நாட்களாக பதுங்கியிருந்தார் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த புதன் கிழமை இரவன்று டெல்லி காவல்துறையினர் மற்றும் குற்றவியல் துறை அதிகாரிகள் இணைந்து பஜன்புரா பகுதியில் உள்ள வீட்டில் அவரை கைது செய்துள்ளனர்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*