துணை கலெக்டராக பொறுப்பேற்ற பிவி.சிந்து

 

ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் வென்று தந்த பேட்மிண்டன் வீராங்கனை பிவி.சிந்து ஆந்திர மாநிலத்தின் துணை கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.

தெலுங்கானப் பிரதேசத்தைச் சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை பிவி.சிந்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் வென்று தந்து அசத்தினார். இதனால், பிவி.சிந்துக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து பாராட்டுக்களுடன் பணம் மற்றும் பரிசு பொருட்கள் குவிந்த வண்ணமிருந்தன. இவரை கௌரவித்து, தெலுங்கானா அரசு 5 கோடியும், ஆந்திர அரசு 3 கோடியும் வழங்குவதாக அறிவித்தன.

மேலும், சந்திரபாபு தலைமையிலான ஆந்திர அரசு, ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிவி சிந்துவுக்கு குரூப் 1 பிரிவு அதிகாரி பொறுப்பான துணை ஆட்சியர் பதவி வழங்கி கெளரவித்தது.

இந்நிலையில், பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ஆந்திர மாநிலம் கொல்லபுடியில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று துணை கலெக்டராக பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிந்து, ’’நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். என்னுடைய கடமையை நான் சரி வர செய்வேன்’’ எனத் தெரிவித்தார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*