பிளாஸ்டிக் பாட்டில்களை மீண்டும் பயன்படுத்தக்கூடாது!!!

நாம் ஏற்கனவே பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டிலை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால், நமது உடல்நலம் பாதிக்கப்படுவது உறுதி, என ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், மக்கள் பணச் சிக்கனம் என்பதை முன்வைத்து உணவு முதல் குடிநீர் வரை வாழ்க்கைக்கு அடிப்படையானவையின் தரத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்கின்றனர். இதில், சிலர் ஒரே பிளாஸ்டிக் பாட்டில்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது. எதற்கு இன்னொன்று வாங்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு பலரும் அதிகளவில் ஒரே பிளாஸ்டிக் பாட்டிலை தொடர்ச்சியாகப் பயன்படுத்துகிறார்கள்.

இந்நிலையில், இவ்வாறு ஒரே பிளாஸ்டிக் பாட்டிலை நீண்ட நாள் தண்ணீர் பருக பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் பற்றி, அரசுசாரா தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டது.

அந்த ஆய்வில், பிளாஸ்டிக் பாட்டிகளில் அதிகளவு பாக்டீரியா தங்குவது வழக்கமாக உள்ளதென்றும், இதனால், நமக்கு கடுமையான உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பாட்டில்களை ஒரு தடவை பயன்படுத்திய உடனே அதனை மீண்டும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அதனை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால், கழிவறையைவிட அதிகளவு பாக்டீரியா அதில் தங்க நேரிடுகின்றது. குறிப்பாக, பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள வேதிப்பொருள் பிஸ்பீனால், நமது செக்ஸ் திறன் வெகுவாகப் பாதிக்கின்றது.

இதுமட்டுமின்றி, நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு, மார்பக புற்றுநோய், இதய நோய் மற்றும் பிறப்புறப்பில் குறைபாடு எனப் பலவகை நோய்களை, பிளாஸ்டிக் பாட்டில்கள் ஏற்படுத்துவதாகவும், ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த பிளாஸ்டிக் பாட்டில்களில் “உபயோகித்தவுடன் குப்பையில் கசக்கி போடவும்” என்று பாட்டில் கவரின் மேலேயே அந்த தயாரிப்பு நிறுவனத்தாலேயே எழுதப் பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*