மராத்வாடாவில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை!

இந்தியா முழுக்க வறட்சி நிலவுகிறது. வட மாநிலங்களை விட இம்முறை தென்மாநிலங்களையும் வறட்சி தாக்கியுள்ளது. மகராஷ்டிர மாநிலத்தின் மராத்வடா பகுதியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.
இந்த வரிசையில் நான்டெட் மாவட்டத்தில் 88 பேரும், அவுரங்காபாத் மாவட்டத்தில் 77 பேரும், உஸ்மானாபாத் மாவட்டத்தில் 74 பேரும், பர்பானி மாவட்டத்தில் 69 பேரும், லத்தூர் மாவட்டத்தில் 52 பேரும், ஜல்னா மாவட்டத்தில் 47 பேரும் தற்கொலை செய்துள்ளனர். மிக குறைவாக ஹிங்கோலி மாவட்டத்தில் 32 பேர் தற்கொலை செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த அறிக்கையில், மரத்வாடா பகுதியில் மனஅழுத்தத்தினால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 546 என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களில், 380 பேர் இழப்பீடு பெற தகுதியானவர்கள் என்றும் அவர்களில் 373 பேரது குடும்பத்தினருக்கு இழப்பீடு முன்பே வழங்கப்பட்டு விட்டது என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

அதேவேளையில், மாவட்ட நிர்வாகத்தின் விசாரணை அடிப்படையில் 83 பேருக்கு இழப்பீடு நிராகரிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 83 பேரிடம் இன்னும் விசாரணை நடைபெறவில்லை.

கடந்த 2015ம் ஆண்டில் 1,133 விவசாயிகளும் மற்றும் 2016ம் ஆண்டில் 1,053 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*