மின்சாரம் தாக்கி மல்யுத்த வீரர் ‘விஷால் குமார் வர்மா’ பலி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்கசிவு ஏற்பட்டு இந்திய தேசிய மல்யுத்த வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஐஸ்பால் சிங் ஸ்டேடியம் 1978-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த ஸ்டேடியம் அந்த மாநிலத்தில் உள்ள மிகவும் பழமையான விளையாட்டு ஸ்டேடியம்களில் ஒன்றாகும். இங்கு தான் ஜார்கண்ட் மாநிலத்தின் மல்யுத்த அசோசியேஷன் அலுவலகம் இயங்கி வருகின்றது. இங்கு மழைக்காலங்களின் போது தண்ணீர் தேங்குவது வழக்காமாகும். தற்போது பெய்த மழையில் தண்ணீர் தேங்கிவிட்டது.

மல்யுத்த வீரராகிய விஷால் குமார் வர்மா(25 வயது) இந்திய அளவில் மல்யுத்த சாம்பியன் ஆவார். உலக மல்யுத்த சாம்பியன் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் மைதானத்தில் தேங்கியிருந்த தண்ணீரை மோட்டார் பம்பு மூலம் வெளியேற்றிக் கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து, ஸ்டேடியத்தில் இருந்தவர்கள் கூறுகையில், ‘’தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததால் தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது’’ எனப் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தின் மின் வாரியத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மின்வாரியம் கூறுகையில், ‘’ஸ்டேடியத்தை பரிசோதனை செய்திருந்தோம். எங்கள் பக்கத்திலிருந்து எவ்விதத் தவறுமில்லை. ஒருவேளை கட்டிடத்தின் உள்ளே ஏதாவது ஷார்ட் சர்க்யூட் பிரச்சினை இருக்கலாம்’’ எனக் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டமானது என ஜார்க்கண்ட் மல்யுத்த சங்கத்தின் தலைவர் போலாநாத் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*