ராம்நாத் கோவிந்தை மேற்குவங்கத்துக்கு அழைத்த மம்தா!

Mamata Banerjee during a public meeting in Singur,on Saturday. Express Photo by Partha Paul. Singur. 23.04.16 *** Local Caption *** Mamata Banerjee during a public meeting in Singur,on Saturday.

பாஜகவை எதிர்ப்பதில் காங்கிரஸ் கட்சியை விட தீவிரம் காட்டி வருகிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. நேற்று முன் தினம் “பாஜகவை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவோம்” என்று  அறைகூவல் விடுத்தார். இந்நிலையில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வென்று ஜனாதிபதி ஆகி உள்ள ராம்நாத் கோவிந்தை மம்தா சந்தித்தார். இச்சந்திப்பு தொடர்பாக டுவிட்டரில் கருத்து வெளியிட்ட மம்தா:-

“ ‘ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து, எனது இதயம் கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன். இது ஒரு அற்புதமான சந்திப்பாக அமைந்தது. விரைவில் கொல்கத்தாவுக்கு வருகை தரவேண்டும் என ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*