அஜித் சிலை திறப்பு விழா : சர்ச்சையில் சிக்கிய இமான் அண்ணாச்சி

சூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் முடிந்து இன்னும் சில நாட்களில் திரைக்கு வர ரெடியாக இருக்கும் படம் விவேகம். இதையொட்டி சமீபத்தில் நடிகர் அஜித்துக்கு விவேகம் படத்தின் கெட்டப்பில் சிலை வைக்கப்பட்டது. மேலும் திருநெல்வேலியில் ஒரு சிலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. விவேகம் அஜித்தின் சிலையை திறந்து வைக்க அஜித் ரசிகர்கள் இமான் அண்ணாச்சியை அழைத்துள்ளனர். இதுவரை அஜித்துடன் இணைந்து நடித்திராத அவரும் மகிழ்ச்சியுடன் சென்று சிலையை திறந்துவைத்து விட்டு பேசியிருக்கிறார்.

அதில் “இதுவரை நான் அஜித்துடன் நடித்ததில்லை. அடுத்ததாக சிவாவும் அஜித்தும் இணைந்தால் அல்லது வேறு ஏதாவது ஒரு படத்தில் அஜித்துடன் நிச்சயம் இணைந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து விவேகம் படத்திற்கு அடுத்ததாகவும் அஜித்-சிவா கூட்டணி இணைகிறது என இமான் அண்ணாச்சி கூறியதாக தகவல்கள் பரவ ஆரம்பித்தது.

இதனால் கடுப்பான இமான் அண்ணாச்சி தான் அவ்வாறு கூறவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், இது போன்ற தேவையில்லாத வதந்திகளை பரப்புவது சம்மந்தப்பட்டவர்களிடம் எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். சிலை திறப்பு விழாவிற்கு மகிழ்ச்சியாக வந்தேன். இப்பொழுது இப்படியாகி விட்டது என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*