இந்தியில் நடிகனாகும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்

‘அக்சர் 2’ எனும் இந்தி படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் இந்தியில் அறிமுகமாகிறார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்.

கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு கிரிக்கெட்டில் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கிலிருந்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஸ்ரீசாந்தை விடுவித்தது. பின்பு, தனக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்குத் தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை அதில் வெற்றியும் பெற்றார். தற்போது அவரது மீதான வாழ்நாள் தடை நீக்கப்பட்ட இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய பிசிசிஐ தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அவர் இந்தியில் நடித்துள்ள ‘அக்சர் 2’ படம் வெளியாகவுள்ளது. கடந்த ஜூன் மாதம் இப்படத்தின் டீசர் வெளியானது. ஏற்கனவே மலையாளத்தில் ‘டீம் 5’ எனும் படத்தில் இவர் நடித்துள்ளார்.

இது குறித்து ஸ்ரீசாந்த் கூறியதாவது, “வாழ்க்கையில் எல்லா நல்ல காரியங்களுக்காகவும் கடவுளுக்கு நன்றி. நான் ‘அக்சர் 2’ இன் பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பார்வையாளர்களால் அது பாராட்டப்படும் என்று எனக்கு மிகவும் நம்பிக்கையுள்ளது. என் கிரிக்கெட் வாழ்க்கையின் மிக மோசமான கட்டத்தில் என்னை ஆதரித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. விளையாடுவதற்கு எதிரான தடை நீக்கப்பட்டு விட்டதால், நான் அணியில் சேர்வதற்கு பல வாய்ப்புகள் உள்ளன என்று நான் நம்புகிறேன். எல்லாருடைய அன்பும் ஆதரவும் உற்சாகமும் எப்போதும் தேவை.” என்று கூறியுள்ளார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*