டாப் 8 ஆரோக்கிய உணவுகள்

நாம் வாழ முதல் அடிப்படை தேவையாக இருப்பது உணவுதான். ஆரோக்கியத்துடனும் நோய் நொடியின்றி வாழ்வதற்கு நாம் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுதல் அவசியமாகும். ஆனால், இன்றைய காலத்தில் நாகரிகம் என்ற பெயரில் உடலுக்கேற்ப உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் நாக்கு ருசிக்காக உணவுகளை சுவைக்கின்றோம். இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கமாலேயே போய்விடுகின்றது. சத்துக்கள் உடம்பில் இல்லாததால் நம் ஆரோக்கியம் குன்றி விடுகின்றது.

இதை தவிர்க்க, குறிப்பிட்ட சில உணவுகளை, குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது அவசியம் சாப்பிடுதல் அவசியமாகும். இதன் மூலமாக உடலுக்கு தேவையான சத்துகளை நாம் மீண்டும் பெற முடியும். அவற்றில், டாப் 8 உணவுகளை கீழே பார்ப்போம்!!!

1) பால் பொருட்களில் கால்சியம் அடங்கியுள்ளதால் எலும்பு மற்றும் பற்கள் வலிமை பெறுகின்றது. பால் பொருட்களில் கால்சியம் நிறைந்த கொழுப்பு நீக்கப்பட்ட யோகட் ஒரு கப், இது கால்சியம் வைட்டமின் டி நிறைவாக உள்ள சிறந்த உணவுவாகும். இதை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு அத்தியாவசியமான பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், ரிபோஃப்ளாவின், வைட்டமின் பி12 மற்றும் புரத சத்து ஆகியவை கிடைக்கும். யோகார்ட் சாப்பிடுவதன் மூலமாக 100 கலோரி கிடைக்கும்.

2) புரத சத்துள்ள உணவுகளில் முட்டை சிறந்தவொரு உணவாகும். புரத சத்துதான் ஆரோக்கியத்துக்கும், உடல் வளர்ச்சிக்கும் அடிப்படையான ஒன்றாகும். அடிக்கடி உணவில் முட்டையை எந்த வகையிலாவது எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலையில் ஒரு முட்டை சாப்பிட்டால், அதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் நாள் முழுவதும் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ளும்.

3) ஆலிவ் விதைகளில் ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் உள்ளதால் இதில் பாலிஅன்சாச்சுரேட்டடு கொழுப்பு அடங்கியுள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாகயுள்ளதால், நாம் சாப்பிடும் உணவு அல்லது நொறுக்கு தீனிகளில் இதை உடன் சேர்த்துக்கொண்டால் எளிதில் செரிமானமாகும்.

4) கீரை வகைகளில் குறைந்த அளவு விட்டமின்-ஏ உள்ளது மற்றும் அதிகளவில் விட்டமின்-சி மற்றும் கே உள்ளது. உடலுக்கு தேவையான தாதுசத்துகளான இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், விட்டமின்-இ ஆகியவையும் அடங்கியுள்ளது, நாம் தினமும் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

5) பீன்ஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் புரோட்டீன் நார்ச்சத்து, பி காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட், விட்டமின்கள் அடங்கியுள்ளது. இதில் இரும்புசத்து, மாங்கனீஸ், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம், தாமிரம் போன்ற தாது சத்துகளும் நிறைந்துள்ளது. இது, உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை‌ தடுத்து, ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.

6) தோடம்பழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளது., இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும். தினசரி ஒரு தேடம்பழத்தினைப் பழமாகவோ அல்லது ஜூஸாகவோ சாப்பிடுவது நல்லது, நமது உடலுக்கு ஆரோக்கியத்தினை தரும்.

7) சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள விட்டமின் ஏ சத்தில் இருந்து கிடைக்கக்கூடிய ஆல்பா மற்றும் பீட்டா கரோட்டீன், கண், எலும்பு ஆரோக்கியத்துக்கு நல்லது, வேகவைத்து இந்த கிழங்கை அப்படியே சாப்பிடுவது நல்லது.

8) பூசணிக்காய் விதையிலும் ஏராளமான சத்து நிறைந்துள்ளது. நார்ச்சத்து, விட்டமின், தாதுப்பொருள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளதால், பூசணிக்காய் விதையை காயவைத்து, பொடியாகவோ அல்லது அப்படியோ நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*