டிஜிட்டல்வாசி : இங்குட்டு சொந்தமா முரசொலி இருக்கு… அங்குட்டு!!

ரொம்ப போரடிக்குதா? வேலை செய்ய கடுப்பா இருக்கா? வாங்க நம்ம டிஜிட்டல்வாசி ஊர்ப்புரளிகளையெல்லாம் தொகுத்து வழங்க வந்துருக்காரு… பிக்பாஸு, மோடி அரசு, தமிழக அரசு,சாதிமதம்னு பல மேட்டர் கிடக்கு…

@சித்தன் ஆனந்த்குமார்
ஏலே சங்கிகளா..
திமுகவாது சொந்தமா முரசொலினு ஒன்னு 75 வருசமா வைச்சுருக்கு..
அங்க சொந்தமா ஒன்னும் இல்லாம,
தினமலர்னு ஒரு கீப்பை வைச்சுட்டு வசனம் பேசறீங்களேடா??!!

@Miracle Muza Miracle Muza
தினகரன்; போயா 420
எடப்பாடி; நீ தான்யா 420
OPS: யாரு என்னய 2டைம்ஸ் கூப்ட்டது?

@சிவ சிவா
ஓபிஎஸ்க்கு துணை முதல்வர் பதவியாமே..??
.
தர்மயுத்தம் எங்கண்ணே..
.
அது ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் இருக்கு…

 

 

 

 

 

 

 

 

@Jaffar Ali
ரத்த கண்ணீர் படத்துல நடிக வேல் எம். ஆர்.ராதா ஸ்பீச் பார்த்துனு இருக்கேன்
நடிப்புனா என்னேனு கொஞ்சம் பார்த்து தெரிஞ்சுங்கோங்டா ???

@சித்தன் ஆனந்த்குமார்
ஆயிரம் கதைகள் படித்தாலும்
ஒரு ஊர்ல ஒரு அம்மா அப்பா இருந்தாங்களாம்..
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்..
என்கிற கதைகளின் சுவாரசியத்தை
எந்த நாவலும் தருவதில்லை..

@Kartik Raj P
ஆம்புலன்ஸ்க்கு வழி விடறவன் மனுசன்..
வழி விட்டுட்டு எந்த சிக்னல்லயும் நிக்காம அது பின்னாலயே போறவன் பெரிய மனுஷன் ?

@சிவ சிவா was feeling crazy.
வேலையில்லா பட்டதாரி – 2 படம் எப்டீண்ணே..?
.
வேற வேலையில்லேன்னா போய் பாக்கலாம்ண்ணே

 

 

 

 

 

 

@சித்தன் ஆனந்த்குமார்
வெளியே இருக்கும் வரை கட்சிக்கு அடித்துக்கொண்டு இருந்தவர்கள்..
இனி பதவிக்கு அடித்துக்கொண்டு
பஞ்சாகி பஞ்சராகி போவார்கள்…

@Karthick Dp
தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர்
தாயுமானவர்
-தமிழ் கவிஞர் சினேகன்
@சிவ சிவா
வீடுகளில் 12 மதுபான பாட்டில்களை இருப்பு வைத்துக் கொள்ளலாம் -தமிழக அரசு
.
வீட்டுக்கு பக்கத்துல தான ஒயின்ஷாப் வைக்கக் கூடாது.. வீட்டையே மினி ஒயின்ஷாப் ஆக்கிட்டான்ங்க..

 

 

 

 

 

 

 

 

@K Vadivel Kuppusamy
என் மனைவி அவங்க அம்மா வீட்ல இருக்கும் போது சமைச்சு போடுற சமையலோட ருசி அப்படி இருக்கும் ஆனா இங்க எங்க வீட்ல வந்து சமைச்சா வாய்லயே வைக்க முடியாது என்னவா இருக்கும் பிரண்ட்ஸ்

@Venu Nithin
டாக்டர்
என்வீட்டுக்காரர் PAN கார்டை முழுங்கிட்டார்
ஆதார்கார்டையும் முழுங்க சொல்லுங்க
ரெண்டையும் இணைச்சாத்தான் ட்ரீட்மெண்ட் பண்ண முடியும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*