தமிழகத்தை விட்டு வெளியேற மாட்டோம் – ஓஎன்ஜிசி

நெடுவாசல் பிரச்சனையில் எந்த மாற்றமுமில்லை. நெடுவாசலில் எரிவாயு எடுக்கும் பணி பாதுகாப்பானதுதான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் விளைநிலங்களிலிருந்து ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இதனை எதிர்த்து அக்கிராமத்திலுள்ள மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இன்றுவரை தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இதுபோல் கும்பகோணம் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி அமைத்த குழாயிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறியதால் குழாய்களை அகற்றக் கோரி அங்கும் மக்கள் போராடி வருகின்றனர். ஆனால் அரசு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் வைத்தது. இதனால் போராட்டம் பெரிதாக உருவெடுக்க போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டார்கள்.

இந்நிலையில் நெடுவாசலில் எரிவாயு எடுப்பது பாதுகாப்பான பணி என்று கூறியுள்ளனர். இதையடுத்து கதிராமங்கலத்தில் பதிக்கப்பட்டுள்ள எண்ணெய் குழாய்கள் பாதுகாப்பானவை என்றும் அவற்றை பொறியியலாளர்கள் பராமரித்து வருவதாகவும் இதற்கு மேல் 110 எண்ணெய் கிணறுகள் தோண்ட திட்டமிட்டுள்ளதாகவும் ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் பேட்டியளித்துள்ளனர்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*