நான் மறுபடியும் ஒரு வேலையில்லா பட்டதாரி: விஐபி-2 விமர்சனம்

சென்னைக்கு ஏதேதோ கனவுகளோடு வந்து, நினைத்த துறையில் சாதிக்க முடியாமல் தவிப்பவர்கள், லட்சியத்தை விட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்பவர்கள் என பலரை நாம் கடக்க நேர்ந்திருக்கும். அப்படி வரும் இளைஞர்களுக்கு, தன்னுடைய துறை சார்ந்து சாதிக்க நினைக்கும் நண்பர்கள் அவ்வளவு எளிதில் அமைவதில்லை. ஒருவேளை அதுபோன்ற நண்பர்கள் கிடைத்தால், நாம் நினைத்த துறையில் வேலை செய்ய எளிதாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும்  லட்சக்கணக்கான மாணவர்கள் படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். ஆனால் அவர்களுக்கு வேலை கிடைப்பது திண்டாட்டமாக இருக்கிறது. ஒரே துறையில் ஆர்வமுள்ளவர்கள் இணைந்து பணியாற்றினால் எளிதாக வெற்றிபெற முடியும் என வேலையில்லா பட்டதாரிகளுக்காக ரகுவரனால் ஆரம்பிக்கப்பட்ட ஃபேஸ்புக் க்ரூப்தான் ‘VIP’. இதன்மூலம் வேலையில்லா பட்டதாரிகளுடன் இணைந்து பணக்கார முதலாளி பையனை எதிர்த்து தன்னோட முதல் ப்ராஜெக்ட வெற்றிகரமா முடிச்சு, தமிழக அளவில் புகழ்பெற்ற இன்ஜினியர்தான் ரகுவரன் (தனுஷ்).

விசாரணை வளையத்தில் பிக்பாஸ் ஏன் தெரியுமா?

 

 

 

இது அவரோட இரண்டாவது ப்ராஜெக்ட், இந்தமுறை அவருக்கு எதிரியா அழகும் திமிரும் நிறைஞ்ச வசுந்தரா (கஜோல்). தமிழ்நாட்டின் புகழ்பெற்ற இன்ஜினியர் ரகுவரனுக்கும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற கட்டிட நிறுவனரான வசுந்தராவுக்கும் இடையேயான சின்ன பஞ்சாயத்துதான் விஐபி-2. ஒரு சின்ன நிறுவனத்தின் முன்னேற்றத்துக்கு போட்டியாக மற்ற சின்ன நிறுவனங்கள் இருக்குதோ? இல்லையோ?… நிச்சயமாக ஒரு பன்னாட்டு நிறுவனம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பன்னாட்டு நிறுவனங்களின் பொறாமையால் பல சின்ன நிறுவனங்கள் காணாமல் போன வரலாறு இங்கே ஏராளம். விஐபி முதலாவது பாகத்தில் சென்னை மவுலிவாக்கத்தில் தரமில்லாத கட்டிடம் இடிந்ததை ஒரு பாயிண்ட்டாக முன்வைத்து கட்டிட துறையில் நடக்கும் ஊழல்கள் பற்றி கமெர்சியல் ரீதியாக பேசப்பட்டது. இந்தமுறை அதேபோன்று சென்னை ஏரி நிலங்களை ஆக்கிரமித்ததால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய சின்ன கருத்தை முன்வைத்து விஐபி-2 கதை நகர்கிறது. பணத்துக்காக ஏரி நிலங்களை ஆக்கிரமித்த பலர் சென்னை வெள்ளத்தில் தங்கள் ஆசையை தொலைத்துவிட்டனர். ரகுவரனுக்கும் வசுந்தராவுக்கும் இடையேயான மோதல் எப்படி முடிவடைகிறது என்பதே விஐபி-2.

இந்த அவலம் தெரியுமா? மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் குழந்தைகளுக்கு ஆக்சிஜன் இல்லை!

 

 

 

 

 

நடிகர் சிம்புவோடு வேலை செய்ய நீங்க ரெடியா?

வசுந்தரா கதாபாத்திரத்துக்கு சற்று மேக்கப்-ஐ குறைத்திருக்கலாம். ரகுவரனுக்கும் வசுந்தராவுக்குமான சண்டைகள் ஒருபுறம் இருக்க, குடும்பத்தோடு அதிக நேரத்தை செலவிடுகிறார் ரகு. கல்யாணம் என்பதே கவலையான சம்பவம் போல சித்தரிக்கப்பட்டுள்ளது. ஷாலினி (அமலா பால்) ரகுவரன் இடையேயான சண்டைகள் நாடகம் போல மெதுவாக நகர்கிறது. இதில் ஒரு சில காட்சிகள் மட்டுமே ரசிக்கும்படி உள்ளது. சுரபி நடித்த அனிதா கதாபாத்திரத்தில் ரிது வர்மா கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சமுத்திரகனியின் தொடர் அறிவுரைகளை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். படம் மெதுவாக செல்லும் வேளைகளில், விவேக் செய்யும் காமெடிகள் ஆறுதல் அளிக்கிறது.

 

 

 

 

 

 

 

தனுஷ் வழக்கம் போல அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முதலாம் பாகத்தில் வந்தது போன்ற சிறப்பான பன்ச் வசனங்கள் இதிலும் இடம்பெற்றுள்ளது. வணிக ரீதியான திரைப்படத்துக்கு தேவையான அத்துனை அம்சங்களும் இதில் இருக்கிறது. எனினும் முதலாம் பாகத்தில் கேட்ட அனிருத் இசையை சீன் ரோல்டனால் நிறைவு செய்ய முடியவில்லை. மற்றபடி டெக்னிக்கல் டீமில் ஏதும் குறையில்லை. சண்டை காட்சிகளும் அருமையாக இருக்கிறது. விஐபி முதலாம் பாகம் அளவுக்கு இல்லை என்றாலும், நிச்சயமாக நல்ல பொழுதுபோக்கு திரைப்படம் என்பதில் சந்தேகமில்லை. விஐபி-3 எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கிறது. மறக்காமல் திரையரங்குக்கு சென்று விஐபி-2 திரைப்படத்தை காணுங்கள்….

-அருண் பாண்டியன்

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*