பாலிவுட்டில் கால்பதிக்கும் துல்கர் சல்மான்

 

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக விளங்குபவர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான். இவர் கதாநாயகனாக அறிமுகமான முதல் மலையாள படம் ‘செகண்ட் ஷோ’. இதனைத் தொடர்ந்து துல்கர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. மேலும், தமிழிலும் ‘வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி’ போன்ற படங்களில் நடித்துள்ளார். அதனால் தமிழிலும் அவருக்கு பரவலாக ரசிகர்கள் உள்ளனர். தற்போது, துல்கர் சல்மான் 5 படங்களில் கமிட்டாகி உள்ளார்.

இந்நிலையில், பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் துல்கர்சல்மான். இதுவரை பெயரிடப்படாத இந்த படத்தை ரோனி ஸ்க்ரூவாலா தயாரிக்கவுள்ளராம். முதலில் துல்கரின் ரோலில் நடிக்க அபிஷேக் பச்சனை இயக்குநர் அணுகினார். ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அபிஷேக் பச்சன் விலகினார்.

துல்கருடன், இர்ஃபான் கான் மற்றும் மிதிலா பால்கர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இப்படத்தை ஹூசைன் டலால் என்பவர் இயக்கவுள்ளார். படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் ஷூட்டிங்கை இம்மாத இறுதியில் துவங்கத் திட்டமிட்டுள்ளனர். வெகு விரைவில் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெளிவரும் என கூறப்படுகிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*