20 மீட்டர் தூரத்தை 2.91 வினாடியில் கடந்து டோனி அசத்தல்!

பெங்களூரில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வருகை தந்த இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனி அங்கு 20 மீட்டர் தூரத்தை 2.91 வினாடியில் கடந்து கலக்கியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி கலக்கியது நமது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி. தற்பொழுது, இந்திய அணி இலங்கையில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டி நாளை பல்லேகலேயில் தொடங்குகின்றது.

இந்த டெஸ்ட் போட்டிக்குப்பிறகு இந்தியா ஐந்து ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் இலங்கைக்கு எதிராக விளையாடுகின்றது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்குகின்றது. இந்த தொடருக்கான இந்திய அணி நாளைமறுநாள் அறிவிக்கப்பட இருக்கின்றது. ஒருநாள் கிரிக்கெட் அணியில் டோனிக்கு கட்டாயம் இடமுண்டு.

இரு தொடர்களுக்கு இடையில் நீண்ட நாட்கள் இடைவெளி ஏற்படுமானால், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் வீரர்கள் தங்களது உடற்தகுதியை நிரூபித்து காட்ட வேண்டும். அதற்கேற்ப, தன் உடற்தகுதியை நிரூபித்துக் காட்ட டோனி பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்திருந்தார். அவருடன் கேதர் ஜாதவ், சுரேஷ் ரெய்னாவும் வந்திருந்தனர். அங்கு டோனி 20 மீட்டர் தூரத்தை 2.91 வினாடிகளில் கடந்து அசத்தியுள்ளார்.

இதுகுறித்து, தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த டோனி கூறியிருந்ததாவது, ‘’அனைத்து டெஸ்ட் நடைமுறையும் முடிந்துவிட்டது. 20 மீட்டர் ஓட்டத்தை 2.91 வினாடிகளில் கடந்தேன். மூன்று ரன்கள் ஓட வேண்டிய தூரத்தை 8.90 வினாடிகளில் கடந்தேன்’ எனத் தெரிவித்துள்ளார். அத்துடன், சக வீரர்களுடன் சாப்பிடும்போது எடுத்த படத்தை வெளியிட்டு ‘‘மதிய சாப்பாட்டிற்கான நேரமிது’’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*