சிம்பு படத்தில் நீங்களும் பணிபுரியலாம்?

சிம்பு திரைப்பட உருவாக்கக் குழு, அவரது படத்தில் பணிபுரிய ஆட்கள் தேவையென அறிவித்திருக்கின்றனர். புதிதாக அறிவிக்கப்பட்ட படத்தில் பணிபுரிய துடிப்பான இளைஞர்கள் தேவை என்று சிம்புவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கீழ்கானும் பிரிவுகளில் பணிபுரிய ஆட்கள் தேவை
1. துணை இயக்குனர்கள்
2. ஔிப்பதிவு மற்றும் புகைப்படக் குழு
3. எழுத்தாளர்கள் குழு
4. ஃபேஷன் டிசைனிங் குழு
5. இசை மற்றும் ஒலிப்பதிவு குழு
6. எடிட்டிங்/ விஎஃப்எக்ஸ்/ அனிமேசன்/ டிஜிட்டல் டிசைன்
7. கலை வடிவமைப்பு
8. உருவாக்கக் குழு
9. தகவல் தொழில்நுட்பக் குழு
10. தொலைதொடர்புக் குழு
11. சட்டதிட்டக் குழு
12. ஆராய்ச்சிக் குழு
13. ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாகக் குழு
14. டைப்- ரைட்டிங் குழு
15. நிதி நிர்வாகக் குழு
சிம்பு நடிக்கவுள்ள ஆங்கிலத் திரைப்படத்தில் பணிபுரிய இந்தத் துறை சார்ந்து சாதிக்க நினைக்கும் இளைஞர்கள் தேவை. இந்தப் படத்தின் இசை வேலைகளை யுவன் சங்கர் ராஜா கவனிக்கிறார். சந்தோஷ் சிவன் ஔிப்பதிவு செய்வதாகவும், கௌதம் மேனம் வசனம் எழுதுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கான விபரங்கள்.. சிம்புவின் ட்விட்டர் தளத்திலும் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*