மாட்டுக்கு ஆம்புலன்ஸ்:குழந்தைகளுக்கு ஆக்சிஜன் இல்லை!

Gorakhpur : An inside view of a ward of BRD Hospital in Gorakhpur on Friday where at least 30 children died since the past two days, allegedly due to oxygen supply cut on Friday. PTI Photo (PTI8_11_2017_000220B)

உத்திரபிதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இரண்டு நாட்களில் 35 குழந்தைகள் மரணமடைந்திருக்கிறார்கள்.இதற்கு பொறுப்பாக மருத்துவக் கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

அதிக மக்கள் தொகை எண்ணிக்கை கொண்ட உத்திரபிரதேசத்தில் ஒரு லட்சம் பேருக்கு ஒரு மருத்துவமனை உள்ளது. மக்களுக்கு முறையான மருத்துவ வசதிகளோ ஆம்புலன்ஸ் சேவைகளோ கிடைப்பதில்லை.கல்வி, தனிநபர் வருமானம் ஆகியவற்றில் பின் தங்கியிருக்கும் உத்திரபிரதேச மாநிலத்தில் ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காமல் பிணத்தை தூக்கிச் செல்லும் அவலங்களும் அவ்வப்போது நடக்கும் நிலையில்.

விசாரணை வளையத்தில் பிக் பாஸ் என்ன காரணம் தெரியுமா?

மாட்டுக்கு ஆம்புலன்ஸ் அறிமுகம்

உத்திரபிரதேசம் கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இரு நாட்களில் மட்டும் 35 குழந்தைகள் மரணம்டைந்திருக்கும் செய்தி நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.தொடர்ந்து ஐந்து நாட்களில் 60-க்கும் அதிகமான குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
அம்மாநில எதிர்க்கட்சிகள் இப்பிரச்சனையை கையில் எடுத்திருக்கும் நிலையில் முதல்வர் யோகி ஆதியநாத் இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

உங்களுக்கு இது பயன்படலாம்:- சிம்பு படத்தில் நீங்களும் பணிபுரியலாம்?

மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் அறிமுகம் செய்த யோகி!
இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்து தேசியவாதம் தங்களுக்கு அரசு அங்கீகாரம் கிடைத்து விட்டது போல எழுச்சி பெற்று வருகிறது. மாட்டுக்கறிக்கு தடை, தாக்குதல் என்று துவங்கி பாஜக முதன் முதலாக உத்திரகாண்ட் மாநிலத்தில் மாட்டுக்கு 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவையை துவங்கியது, அரியானா அரசு 24 மணி நேர ஹெல்ப் லைன் வசதியை துவங்கியது. உத்திரபிரதேசத்தில் ஆட்சிக்கு வந்த யோகி ஆதித்யநாத் மாடுகளுக்கு தேவையான அனைத்து நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகம் செய்தார்.
மாடுகள் படு உற்சாகமாக ஏசி ரயில்களில் பயணம் செய்தால் டிக்கெட் பரிசோதகர்கள் பசு காவலர்களுக்கு பயந்து மாட்டை இறக்கி விடுவதில்லை. இதுதான் இன்றைய உபியின் மேன்மையான நிலை ஆனால் அதே உபியில் மருத்துவம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை 60 -பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் மரணம் எடுத்துக் காட்டுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*