விசாரணை வளையத்தில் பிக்பாஸ்: கமலை கார்னர் செய்ய திட்டம்!

செம்பரம்பாக்கம் அருகில் பிக்பாஸ் செட் போடப்பட்டுள்ளது. தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வரும் கமல் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால் தமிழக உளவுத்துறை இந்நிகழ்ச்சியை கண்காணித்து வருகிறது. இன்னொரு பக்கம் தமிழக அரசை விமர்சிக்கும் ரஜினி, கமல் ஆகியோரை பாஜக தங்கள் பக்கம் ஈர்க்க முயன்றும் அவர்கள் இருவருமே பிடிகொடுக்கவில்லை. ஆனால் திமுகவோடும் அதன் தலைவரோடு நல்ல உறவைப் பேணுகிறார்கள். இது அரசியல் உறவு அல்ல என்பது பாஜக, அதிமுகவுக்கு தெரியும் என்றாலும் தங்கள் எவளவோ கோரிக்கை வைத்தும் கண்டு கொள்ளாதவர்கள் முரசொலி விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

உங்களுக்கு இது பயன்படலாம்:- சிம்பு படத்தில் நீங்களும் பணிபுரியலாம்?

மேலும், கமல் சமீபத்தில் காயத்ரி ரகுராமுக்கு வகுப்பெடுப்பது போல தமிழகம் தொடர்பாக சில கருத்துக்களைச் சொன்னார். அதில் மறைமுகமாக அவர் திராவிட இயக்கத்தையும் இது சுயமரியாதை மண் என்றும் சொன்னார். அதையே வெளிப்படையாக முரசொலி விழாவிலும் பேசினால் ஒட்டு மொத்தமாக கமலின் இந்த பேச்சுகள் ஆளும் கட்சியின் மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதோ இல்லையோ அதிகாரிகள் மூலம் பாஜகவின் மேலிடத்திற்குச் சென்றிருக்கிறது.

இந்த விஷயத்த நீங்கள் கேள்விப்பட்டீங்களா? மாட்டுக்கு ஆம்புலன்ஸ்:குழந்தைகளுக்கு ஆக்சிஜன் இல்லை!

நடிகை ஓவியா பிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் சம்மன் அனுப்பி அவரை விசாரித்து விட்டு பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சிலரையும் தேவைப்பட்டால் விசாரிக்க தயாராகி வருகிறது போலீஸ் என்கிறது சில வட்டாரங்கள்.ஓவியாவுக்கு பைபோலா டிசாடர் குறைபாடு இருப்பதாக அவர் வெளிப்படையாக சொன்ன பிறகும் நிகழ்ச்சியில் அவரை தொடர நிர்பந்தம் உருவாக்கப்பட்டதா என்பதோடு. அங்கு நடந்த தற்கொலை நிகழ்வு தொடர்பாக விசாரணை இருக்கலாம். இந்த விசாரணையின் மையம் ஓவியாவோ, ஆரவோ இல்லை. கமலை டார்கெட்டும் முயற்சி என்கிறார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*