திரும்பி பார்க்க வைத்த தினகரன் : அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி

டிடிவி தினகரன் மதுரை மேலூரில் கூட்டியிருக்கும் கூட்டத்துக்கு தொண்டர்கள் கூட்டம் அதிகளவில் கூடியதால் எடப்பாடி பழனிசாமி கடும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்.

அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைவதற்கு டிடிவி தினகரன் விதித்த 60 நாட்கள் கெடு முடிவடைந்ததையடுத்து டிடிவி கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனால் பதற்றமடைந்த பழனிசாமி அணியினர் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி தினகரனை கட்சியிலிருந்து நீக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனையடுத்து கொதிப்படைந்த தினகரன், தடம் மாறாமல் சென்றால் தமிழக அரசுக்கு எவ்வித ஆபத்துமில்லையென்று பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். மேலும், சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கும்முன்னர் நேற்று சசிகலாவை பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சந்திக்க சென்றார் தினகரன்.

அட நம்ம 54 வயசு மய்ல் யாரு தெரியுமா? இதை க்ளிக் பண்ணுங்க…!

 

இந்நிலையில், டிடிவி தினகரன் ஏற்கனவே அறிவித்திருந்தபடி இன்று முதல் தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். அவரது சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக மதுரை மாவட்டம் மேலூரில் இன்று மாலை நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசவிருக்கிறார். முன்னதாக மதுரை, ஒத்தக்கடை நான்கு வழி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், செந்தில் பாலாஜி, பழனியப்பன், தோப்பு வெங்கடாசலம், ரங்கசாமி, உமா மகேஸ்வரி, சாத்தூர் சுப்பிரமணியன், கென்னடி மாரியப்பன், கரூர் தங்கதுரை, ஜக்கையன், கதிர்காமு, பரமக்குடி முத்தையா, வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இன்று மாலை நடக்கும் கூட்டத்துக்கு அதிமுகவில் உள்ள அனைத்து எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி யார் கலந்து கொள்வார்கள் என்றும், அவர்களை வரவேற்பது குறித்து விவாதித்தனர் என கூறப்படுகிறது.

இதையும் வாசிங்க கஃபீல் கான் என்ற டாக்டரை உபி அரசு நீக்கியிருக்கிறது ஏன்?

இதனையடுத்து இன்று மாலை மதுரை மாவட்டம் மேலுரில் பொதுக் கூட்டம் கூட்டப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த பொதுக் கூட்டத்திற்கு தொண்டர்களின் கூட்டம் அதிகளவில் இருக்கிறது. மேலூரில் மழை பொழியும் அளவு மேகமூட்டங்கள் இருந்தாலும் கூட்டம் கலையாமல் இருக்கிறது. டிடிவி தினகரன் இன்னும் மேடைக்கு வராத நிலையில் மைதானம் நிரம்புமளவு கூட்டம் கூடியிருக்கிறது. இதனையடுத்து டிடிவி தினகரன் மேடைக்கு வந்ததும் மேற்கொண்டு கூட்டம் கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் குழந்தையின் கையில் உள்ள மொபைல் அதன் உயிரை பறிக்கக் கூடும் க்ளிக் பண்ணி வாசிங்க

டிடிவி தினகரனின் இந்த சுற்றுப்பயணத்தில் அவருக்கு நிச்சயம் ஆதரவு இருக்காது என்று நினைத்த எடப்பாடி பழனிசாமி அணிக்கு தற்போது கூடியிருக்கும் கூட்டம் நிச்சயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். தனது சுற்றுப்பயணத்தின் முதல் பொதுக் கூட்டத்துக்கே இவ்வளவு கூட்டம் கூடியிருப்பதால் டிடிவி அணிக்கு மிகப்பெரிய உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது. எனவே இனி வரும் கூட்டங்களிலும், சுற்றுப்பயணத்திலும் டிடிவி தினகரன் பல அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*