முன்கூட்டியே வருகிறது நாடாளுமன்ற தேர்தல்?

2019-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய நாடாளுமன்ற தேர்தலை அதற்கு முன்னதாக 2018-ஆம் ஆண்டு இறுதியிலேயே நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான் உள்பட பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல், அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கிறது. அரசுக்கு வரும் கூடுதல் செலவுகளை கட்டுப்படுத்த, மேற்கண்ட மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களுடன் சேர்த்து 2019 ம் ஆண்டு நடக்க வேண்டிய நாடாளுமன்ற தேர்தலையும் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து மத்திய அரசு தேர்தல் ஆணையத்திடமும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இத வாசிச்சிடுங்க : நீட் தேர்வு : ஆதரவாக ஆஜராகிறார் நளினி சிதம்பரம்?

மேலும், இதுதொடர்பாக 2019-ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் மாநிலங்களின் ஆளும் கட்சிகளான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்குதேசம் மற்றும் பிஜூ ஜனதா தளம் ஆகியவற்றின் கருத்துகளையும் மத்திய அரசு கேட்டுள்ளதாக தெரிகிறது. மத்திய அரசின் இந்த முடிவு குறித்து தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த பரிந்துரையை ஏற்று, தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்கூட்டியே தேர்தல் நடந்தால் அது மத்தியில் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக இருக்குமென்று கருதப்படுகிறது. மேலும் மத்திய அரசுக்கு சாதகமாக வாக்கு விழும்போது அதன் பிரதிபலிப்பு மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களிலும் இருக்குமென கருதும் பாஜக முன்கூட்டியே தேர்தலை நடத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அதனால் நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடக்க வாய்ப்புகள் அதிகமெனவும் கருதப்படுகிறது

இது தெரியுமா : அட நம்ம மய்லுக்கு 54 வயசாச்சு

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*