’ஜெ’ சந்தேக மரணம்:கத்தியை ஓ.பி.எஸ் பக்கம் திருப்பிய தினகரன்!

75 நாட்கள் சிகிச்சையின் பின்னர் அப்பல்லோவில் மரணமடைந்தார் ஜெயலலிதா. அப்போது அதிமுக எம்.எல்.ஏக்களிடம் கட்டாய கையெழுத்து மூலம் பாஜகவால் முதல்வராக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பதவியிழந்ததும் கையிலெடுத்த முதல் ஆயுதம் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என்பதுதான். ஆனால் அதே கேள்விகளும் சந்தேகங்களும் பொதுத்தளத்தில் இருந்து எழுந்த போது வதந்திகள் என்ற பெயரால் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டவரும் இதே பன்னீர்செல்வம்தான். ஆனால் இந்த சந்தேகத்தை பொது தளத்தில் உருவாக்கி அதை சசிகலா மீது திருப்பினார். எடப்பாடி பழனிசாமி அணியினரோ அது பற்றி பேசாமல் இருந்தனர்.

இதையும் வாசிங்க,

திரும்பி பார்க்க வைத்த தினகரன் : அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி

 

இந்தக் குற்றச்சாட்டு அப்பல்லோ மீதும் கறையை உருவாக்கியதால் அப்பல்லோ நிறுவனர் பிரதாப் ரெட்டியே ஊடகங்களிடம் அடிக்கடி இது பற்றி பேசும் நெருக்கடிக்கு உள்ளானார். இதுவரை சசிகலாவோ தினகரனோ ஜெயலலிதா மரணம் பற்றி பொது வெளியில் பேசியதில்லை.
ஜெ மரணத்தில் சந்தேகம் என்ற அஸ்திரம்தான் சசிகலா குழுவினரை வீழ்த்த சரியான அஸ்திரம் என்று நினைத்திருந்த பன்னீர் செல்வத்தின் கனவில் பலமான அடி விழுந்திருக்கிறது. மேலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய தினகரன் “ ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அவர் மறைந்த போது பதவியில் இருந்தவர்களே ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார்கள். எங்களுடைய மடியில் கனம் கிடையாது. விசாரணையில் தான் உண்மை வெளிவரும்” என்றிருக்கிறார்.

 

இதை மிஸ்பண்ணிடாதீங்க:-அதிமுக இணைப்பு இனி சாத்தியமில்லை ஏன் தெரியுமா?

 

கடைத் தெருவுக்கு சென்று வர சசிகலா என்ன பூந்தி விக்கிற சாந்தியா?
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் அப்போது அமைச்சரவையை வழி நடத்திச் சென்ற பன்னீர்செல்வத்திற்குதான் அதில் கூடுதல் பொறுப்பு உள்ளது. மரணத்திற்கு பின்னர் முதல்வரான அவர் பதவியிழக்கும் வரை அமைதியாக இருந்து விட்டு. இன்னும் சொல்லப்போனால் அப்படி எழுந்த சந்தேகங்களை வதந்தி என்று போலீசை வைத்து முடக்கியவரும் அவர்தான்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா எழுச்சி இல்லை : தினகரன் சொல்லும் காரணம்!
இப்போது ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலா தரப்பில் இருந்தே விசாரணை கோரிக்கை எழுகிறது. யார் மீது அஸ்திரத்தை ஏவினார்களோ அவர்களே விசாரணை கோரிக்கையை முன் வைக்கிறார்கள். இதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை முந்தைய முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் உண்டு. இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் உண்டு.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*