டிஜிட்டல்_வாசி : புதிய இந்தியா பிறக்கும்: பிஞ்சுக் குழந்தைகள் மட்டும் இறக்கும்…!

71  -வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தியாவில் வெறுப்புணர்வும், பிளவு மனோநிலையும், பெரும்பான்மை வாதமும் எங்கும் பரவி வருகிறது. உலகம் முழுக்க இதுதான் நிலை என்றாலும் கூட  இந்திய சூழல் வன்முறையால் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. நாடு முழுக்க இந்த வெறுப்பரசியலுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி இருக்கிறார்கள். தேசம். இறையாண்மை, தேசப்பற்று, போன்ற வார்த்தைகளில் இந்திய மக்களின் வறுமையும் ஏழ்மையும் முழ்கடிக்கப்படுகிறது.

இது சுந்திரதினம் பற்றிய நெட்டிசன்களின் பதிவுகள்….!

[மாடுகளுக்கு இருக்கும் மரியாதை இந்திய குழந்தைகளுக்கு இல்லையா?]

@Jaffar Ali

இந்தியாக்கு யாரு சுதந்திரம் வாங்கி குடுத்தா ?
A. காந்தி ஜீ
B. நேதாஜீ
C. மோடி ஜீ

@Yuvan PrabhaKaran

புதிய இந்தியா பிறந்தது, ஆக்சிஜன் இன்றி இறந்தது ?
#copied

@சித்தன் ஆனந்த்குமார்
மண்டையில தலைப்பா கட்டின ஒரு ஜென்மம்
மறுக்கா புது இந்தியா பிறந்தது பற்றி பேசுது..
70 குழந்தைகளை கொன்னுட்டு

@Boobathi Kalaivanan
பிடித்த உணவை சுதந்திரமாக சாப்பிட முடியாத நாட்டில் சுதந்திர தின கொண்டாட்டம் தான் ஒரு கேடு ???

@மெஸ்ஸி மச்சான்
கறுமம் இன்னிக்கும் அதே புளிச்சி முட்டாயா..!! கேக்குலாம் வேணாம் ஒறு லட்டுக்காச்சும் வளத்து வுடுங்கடா இந்தியாவ..! பெத்து போட்டா மட்டும் போதாது புதுசு புதுசா..!!!

[803 பாலியல் வன்முறை, 729 கொலைகள்: யோகியின் இரு மாத ஆட்சி]

@Vijay Kumar
இந்தியர்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ??
இவன் ஒலக சிட்டிசன் ?

@Manoj B
சுதந்திர தினத்தன்று சிக்கன் பிரியாணி சாப்பிட்டு…
அந்த சிக்கனுக்கு இந்த மனித மிருகங்கள் வாழும் உலகிலிருந்து சுதந்திரம் கொடுத்துள்ள இந்த துடிப்பான இளைஞனுக்கு எத்தனை லைக்ஸ் பிரென்ஸ்…!!

@தோணி கௌதம்
வருசா வருசம் காந்திக்கும் சுதந்திரத்துக்கும் சம்மந்தமில்லைனு ஒரு குரூப்பு வருமே வந்துடுச்சா?

@Ââšhif Khan
லீவுலாம் இல்ல ஆபீஸுக்கு வாங்கனு சொல்லியாச்சி… போங்கடா நீங்களும் உங்க சொதந்தர தெனமும்…

@Viji Narasimhan
ஏப்படியாவது இனிமே பிறக்கற புதிய இந்தியா வாச்சும் நமல லூசாக்காம இருந்த சரி

[தலித்துக்கள் மீதான உ.பி முதல்வரின் பார்வை என்ன?  துர்நாற்றமற்ற தலித்துகள் மட்டுமே அனுமதி: யோகி]

@Nithya Jana
ஆக்சன் கிங் அர்ஜூன் நடிச்ச “ஜெய் ஹிந்” பட பாடல்கள் கேட்டு நாடி நரம்பெல்லாம் தேசப் பற்றை ஏத்திட்டு இருக்கேன்… ?????
முதோ பாட்டே ப்ளே லிஸ்ட்ல “போதை ஏறிப் போச்சு ஜிங்கு ஜக்கு ஜக்குச்சிம்” ❤️❤️❤️❤️❤️❤️❤️

@Sarvs Sagaa.
Beef சாப்ட்டா போடறதும், ஆக்சிஜன் குடுக்காம கொல்றதும், மீறி கேட்டா பணங்காசு செல்லாதுன்னு சொல்றதுக்கும், வரி போடறதுக்கும் ஏகபோக சுதந்திரம் இருக்கும் நாடு இது என்பதை நினைக்கையில் பெருமையாய் இருக்கிறது. Happy Independence Day to all the Bakths.
#ஹேப்பி_முட்டு_குடுக்கற_டே #ஆக்சிஜன்_கிடைக்காது #ஏதாச்சும்_கேட்டா_ராணுவவீரர்கள்_அங்கே_எல்லையில் #HappyIndependenceDay <3

இதையும் படிசிருங்க :உ.பி யின் உண்மை நாயகன் கஃபீல் கான் பணி நீக்கம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*