தினகரனுக்கு ஆதரவு: கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு!

அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைவதற்கு டிடிவி தினகரன் விதித்த 60 நாட்கள் கெடு முடிவடைந்ததையடுத்து டிடிவி கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனால் பதற்றமடைந்த பழனிசாமி அணியினர் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி தினகரனை கட்சியிலிருந்து நீக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனையடுத்து கொதிப்படைந்த தினகரன், தடம் மாறாமல் சென்றால் தமிழக அரசுக்கு எவ்வித ஆபத்துமில்லையென்று பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்வ்து டிடிவி தினகரன் ஏற்கனவே அறிவித்திருந்தபடி இன்று முதல் தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். அவரது சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக மதுரை மாவட்டம் மேலூரில் நேற்று மாலை நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசினார். இக்கூட்டத்தில் 12 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தமிழக அரசின் ஆதரவு அளித்திருக்கும் எம்.எல்.ஏக்களான கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பாக்கப்பட்டது. அனால் அவர்கள் பங்கேற்கவில்லை. இதனால் அவர்கள் தினகரனின் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலகி விடடடார்களோ என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்தது.இதனைத் தொடர்ந்து கருணாஸ், தமிமுன் அன்சாரி , தனியரசு ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது தொடர்பாக தினகரனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அக்கடிதத்தில் அதிமுகவின் சோதனை காலத்தில் தினகரனின் துணிச்சல் நடவடிக்கையை பாராட்டுவதாகவும்,தினகரனின் நடவடிக்கைக்கு எப்போதும் தங்களின் ஆதரவு இருக்குமென்றும் கூறியிருக்கின்றனர்.

இதையும் படிசிருங்க : ’ஜெ’ சந்தேக மரணம்:கத்தியை ஓ.பி.எஸ் பக்கம் திருப்பிய தினகரன்!

தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக பழனிசாமி தரப்பினர் கூறியதும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் தமிழக அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் விதத்தில் நடந்து கொண்டனர். குறிப்பாக கருணாஸ், தமிமுன், தனியரசு ஆகியோர் மாட்டிறைச்சி தடையை காரணம் காட்டி சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை சென்று சந்தித்தனர். இது தமிழக அரசுக்கு தினகரன் சார்பாக விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவேபார்க்கப்பட்டது .நேற்று கதிரமங்கலம் சென்றிருந்த கருணாஸ், ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழகத்திலிருந்து வெளியேறாவிட்டால் தனது எம்.எல்.ஏ பதவியை இழக்க தயார் என்று கூறியிருந்தார். இதனால் தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சிறிது சிறிதாக தங்களது எச்சரிக்கையை தமிழக அரசுக்கு விடுக்க ஆரம்பித்திருப்பதாக தெரிகிறது. மேலும் தினகரனின் இந்த சுற்றுப்பயணத்துக்கு கருணாஸ், தமிமுன் அன்சாரி , தனியரசு ஆகியோர் ஆதரவு தெரிவித்திருப்பதன் மூலம் தினகரனின் கை மேலும் ஓங்குமென்று தெரிகிறது. தினகரனுக்கு பெருகி வரும் ஆதரவினை எப்படி கட்டுப்படுத்துவது என்று எடப்பாடி தீவிர யோசனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தெரியுமா : அதிமுக இணைப்பு சாத்தியமில்லை!

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*