மைனாரிட்டி ஆனது அதிமுக அரசு!

அதிமுக அரசு பன்னீர் அணி, எடப்பாடி பழனிசாமி அணி, தினகரன் அணி என மூன்று அணிகளாக பிளவு பட்டுள்ளது. இதில் இரு அணிகள் மோடியின் முழுமையாக கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் தினகரன் தனியாக 40 எம்.எக். ஏக்கள் வரை தன் பக்கம் ஈர்த்து விட்டார். ஆட்சி கைவிட்டுப் போகும் நிலையில் நிதியமைச்சர் ஜெயக்குமார் அடுத்தடுத்து விடும் அறிக்கைகள் ஒரு மைனாரிட்டி அரசின் பதட்டமாகவே உள்ளது.

அதிமுக இணைப்பு சாத்தியமில்லை இதை படிச்சிட்டு தொடருங்கள்

தங்களுக்கு 115 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாகச் சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன் ஆனால் நேற்றைய தினகரன் கூட்டத்திற்குச் சென்ற 20 எம்.எல்.ஏக்கள் உட்பட அமைச்சர் பதவி வாரியப்பதவி கிடைக்காத அதிருப்தியாளர்கள் 20 பேர் தினகரனுக்கு ஆதரவளிக்க இருப்பதாக உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறது. இது தவிற அ.தி. மு.க. கூட்டணி கட்சி எம்.எல். ஏ.க்களான தமிமுன் அன்சாரி, கருணாஸ் தனியரசு ஆகியோரும் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 

இதை க்ளிக் பண்ணி வாசிங்க தினகரனுக்கு ஆதரவு: கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு!
இதை வைத்துதான் திண்டுக்கல் சீனிவாசன் “இதுவரை சின்னம்மாவாக இருந்தவர் இப்போது சசிகலா ஆகிவிட்டார்” என்று குண்டு வீசும் அளவுக்கு நிலமை ஐ.சி.யூவில் இருப்பது போலாகி விட்டது. இதுவரை பெரும்பான்மை அரசாக இருந்த எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மை இழந்த மைனாரிட்டி அரசாக மாறி விட்டது.எப்போது வேண்டுமென்றாலும் தினகரன் நினைத்தால் ஆட்சியை கவிழ்க்க முடியும் எனும் நிலையில் பன்னீர்செல்வம் குழுவினரோ அரசுக்கு ஆபத்து வந்தால் கைகொடுக்கிறோம் முதல்வர் பதவியை கொடுத்து விடுங்கள் என்கிறார்கள். இப்போதைக்கு இணைப்பு முயற்சியை கைவிட்டு விட்டு இப்போதைக்கு வேடிக்கை பார்ப்போம் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.

 

திரும்பி பார்க்க வைத்த தினகரன் : அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி

 

எனும் நிலையில் இன்றைய அதிமுகவின் மன நிலையை அப்பட்டமாக வெளிப்படுத்துவது அமைச்சர் ஜெயக்குமார்தான்:-“ அதிமுக நூறு ஆண்டுகளுக்கு மேல் இருக்க வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் கனவு.ஜெயலலிதாவின் கனவை சிதைக்கும் வகையில் யார் செயல்பட்டாலும், அவர்கள் எட்டப்பராக சித்தரிக்கப்படுவார்கள்.அதிமுகவில் தற்போது நடப்பது அண்ணன் – தம்பி சண்டை. அண்ணன் தம்பி சண்டையில் ஸ்டாலின் லாபம் தேடிப்பார்க்கிறார். ” என்றார்.இப்போதைக்கு தினகரனின் தாக்குதலில் இருந்து தப்பி ஸ்டாலின் அஸ்திரத்தை தவிற வேறு எதுவும் கைகொடுக்காது என்பது மைனாரிட்டி அதிமுக அரசுக்கு தெரியும்.

 

பிக்பாஸ் ஸ்பெஷல்

[பரணி காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட ஜூலி #video பாத்தீங்களா!]

 

[#Biggboss ஓவியா பொன்மொழிகள்! படிச்சு பாருங்க]

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*