வரலாற்று சிறப்பு மிக்க நேருவின் முதல் சுதந்திர தின உரை!

1947, ஆகஸ்ட் 15

பல ஆண்டுகளுக்கு முன்பிருந்து நாம் விதியை சந்திக்க முயன்றாலும், அதற்கான தருணம் இப்போது வந்திருக்கிறது. நாம் நமது நாட்டை முழுவதுமாக அல்லது முழுக்க மீட்கவில்லை என்றாலும் கணிசமான அளவு மீட்டிருக்கிறோம். உலகமே உறங்கும் இந்த நள்ளிரவு வேளையில் இந்தியா தன் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தைப்பெற விழித்துள்ளது; தூங்காமல் விழிப்பாக உள்ளது.
இந்த நிகழ்ச்சி வரலாற்றில் மிக அரிதாக நிகழும்படியான சொல், செயல் என அனைத்திலும் நாடு அடிமைப்பட்டுக் கிடந்த காலம் மாறி, பழையவற்றிலிருந்து மீண்டு புதியவற்றுக்கு செல்கிறோம். இந்த மனமார்ந்த செயல்பாட்டின்போது, இந்தியாவிற்கான சேவைகள் மற்றும் அவளின் குடிமக்களின் மீது அர்ப்பணிப்பான பணிகளை செய்யவேண்டும்.
வரலாற்றில் புதிய விடியலை காணும் இந்தியா தனது முடிவில்லாத பயணத்தில் கடும் போராட்டத்தில் கம்பீரமான பல வெற்றிகளையும், தோல்விகளையும் கண்டு கடந்து வந்துள்ளது. நன்மை, தீமை என சமமாக கொண்டு தன் முடிவில்லாத நெடும் பயணத்தில் பெரும் உத்வேகமும், ஆற்றலும் அளித்த லட்சியங்களை அவள் மறக்கவில்லை.

 

இந்த துயரத்தை பகிருங்கள் மாடுகளுக்கு இருக்கும் மரியாதை இந்திய குழந்தைகளுக்கு இல்லையா?
இன்று நமது துரதிர்ஷ்டங்கள் முடிவுக்கு வந்துவிட்டன. இந்தியா தன்னைத்தானே மீண்டும் புதிதாய் கண்டடைந்துவிட்டாள். இந்த சாதனையை இன்று நாம் கொண்டாடுகிறோம். ஆனால் மேலும் பல பெரிய வெற்றிகளும் சாதனைகளும் நமக்காக காத்திருக்கின்றன. தைரியமாகவும், புத்திசாலித்தனமாகவும் இந்த வாய்ப்பினைக் கைப்பற்றுவோமா? எதிர்காலத்திற்கான இந்த சவாலை ஏற்றுக்கொள்வோமா?
சுதந்திரமும், அதிகாரமும் பொறுப்பினை ஏற்படுத்துகிறது. அப்பொறுப்புணர்வை இந்தியாவின் சுதந்திரமான மக்களை அவர்களின் உணர்வை வெளிப்படுத்த, சர்வ சுதந்திரமான ஆற்றல் கொண்ட இச்சபை ஏற்றுள்ளது. சுதந்திரம் கிடைப்பதற்கு முன், நாம் இதற்காக பட்ட வலிகளை நினைக்கும்போது, இதயம் கனமாகி தவிக்கிறது. அந்த வலிகள் தொடர்ந்தும் இன்றுவரை உள்ளன. ஆயினும் கடந்த காலம் முடிந்துவிட்டது. எதிர்காலம் நமது செயல்பாடுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
நமது எதிர்காலம் எளிதான ஒன்றாகவோ அல்லது ஓய்வு கொள்ளும்படியானதாகவோ இருக்காது. ஆனால் தொடர்ந்த போராட்டத்தின் மூலம் மட்டும் நாம் நமது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். இன்று அதில் ஒன்றை எடுத்துக்கொள்வோம். இந்தியாவிற்கான சேவை என்பது கோடிக்கணக்கான துன்பத்தில் தவிக்கும் மக்களுக்குச் செய்யும் பணிகள்தான் வறுமை ஒழிப்பு, கல்வி அறிவின்மை, நோய்கள், வாய்ப்புகளின் சமநிலையற்ற தன்மை ஆகியவற்றை நீக்கிடத்தான் முதலில் கவனத்தில் கொள்ளவேண்டும்.
நம் தலைமுறையின் மிகச்சிறந்த மனிதர்கள் ஒவ்வொரு மனிதரின் கண்ணீர்த்துளிகளையும் துடைக்க பேரார்வம் கொண்டுள்ளோம். இதற்கு அப்பால் பலரும் கண்ணீரும், பாதிப்புகளும் கொண்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு நமது உழைப்பு முடிவடையாது.
நாம் நமது கனவுகளை உண்மையில் காணும் வரை கடுமையாக உழைக்க வேண்டும். இவை இந்தியாவிற்கான கனவுகள். ஆனால் உலகத்திற்கானதும் கூட. அனைத்து நாடுகள் மற்றும் மக்கள் மிகவும் நெருக்கமாக ஒன்றிணைந்து இன்று இருப்பதையும் கூட ஒருவர் கற்பனை செய்து கண்டிருக்கக்கூடும். பிரிக்க முடியாத அமைதியைப் போலவே, சுதந்திரமும், வளர்ச்சியும் இன்று உள்ளன. அதோடு, பேரிடர் போல பல நாடுகளும் தனித்தனி தீவுகளாக இருக்கும் நிலையையும் மாற்றவேண்டும்.
இந்தியாவின் மக்களின் பிரதிநிதிகளான நாம், அவர்களோடு உண்மை மற்றும் நம்பிக்கையோடு இந்த சிறப்பான சாகசப்பயணத்தில் பங்குகொள்ள வேண்டும். இந்த நேரம் அற்பத்தனமாக அழித்து ஒழிக்கும் விமர்சனங்களுக்கோ, விரக்திக்கோ அல்லது அடுத்தவர்களை குற்றஞ்சாட்டவோ பயன்படுத்தப்படக்கூடாது. இந்தியத்தாயின் பிள்ளைகள் அனைவரும் சிறந்த முறையில் வாழ்வதற்கான ஒரு நல்ல வாழிடத்தை உருவாக்கித் தரவேண்டும்.

 

நிர்ணயிக்கப்பட்ட நாள் விதியினால் ஏற்படுத்தப்பட்டு நீண்ட உறக்கத்திலிருந்து எழுந்து போராட்டத்தினால் விழிப்புணர்வு பெற்று உயிர்ப்பான, சுதந்திரமான, தற்சார்பு நிலையை அடையும். இறந்த காலம் சில விஷயங்களில் நம்மைத் தொடர்ந்து வருவதற்கு முன்னமே அவற்றில் உள்ள வாக்குறுதிகளை தொடர்ந்து மீட்டெடுக்க வேண்டும். இன்று திருப்புமுனையாக இறந்த காலம் மற்றும் வரலாறு புதிதாக தொடங்கியுள்ளது. அதில் நாம் வாழ்வதோடு செயல்படும் விஷயங்களை மற்றவர்கள் எழுதக்கூடும்.
இந்தியா மற்றும் உலகத்திற்கே முக்கியமான நிகழ்வு இது. புதிய நட்சத்திரமாக, சுதந்திரச்சின்னமாக கிழக்கில் உதித்து, புதிய நம்பிக்கைகளை மனதில் விதைத்து தொலைநோக்கான லட்சியங்களை நினைவில் கொண்டு அவற்றை உருவாக்கவேண்டும். இந்த நட்சத்திரம் மறைந்துவிடாதபடியும், நம்பிக்கை ஏமாற்றம் தரும்படியும் இல்லாது செயல்படவேண்டும்.

//உங்கள் குழந்தையின் கையில் இருக்கும் மொபைல் உயிர் பறித்து விடும் தெரியுமா?//

 

சுதந்திரம் பெற்றதில் மகிழ்ச்சி கொண்டிருக்கும் இந்த வேளையிலும், பல மேகங்கள் போல மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் நம்மை சூழ்ந்துள்ளன. சுதந்திரம் தந்துள்ள பொறுப்புகள் மற்றும் கடமைகளை நேருக்கு நேராக உத்வேகத்துடன் சுதந்திரமான ஒழுக்கமான மக்களின் ஆற்றலுடன் எதிர்கொள்வோம்.
இன்றைய நாளில் சுதந்திரத்திற்கான கருத்துக்களை கட்டமைத்தவரை, நம் நாட்டின் தந்தையை தொன்மை கொண்ட இந்தியாவிற்கு உருவம் கொடுத்தவரை, சுதந்திரத்திற்கான விளக்கினை மேலே ஏற்றி வைத்தவரை, நம்மைச் சுற்றியிருந்த கொடும் இருளை ஒளியினால் விலகச்செய்தவரை நினைத்துப் பார்க்கவேண்டும்.
அவர் கூறிய செய்திகளை பின்பற்றாது விலகி நடக்கும்போது, நாம் மதிப்பிழந்த மக்களாவோடு, அடுத்து வரும் தலைமுறையினரிடமும், அவரின் செய்திகளைக் கூறுவதோடு, அவர் பின்பற்றிய உண்மை, வலிமை, தைரியம், பணிவு ஆகியவற்றை அவர்களின் மனதில் பதிய வைக்க முயற்சிக்கவேண்டும்.
சுதந்திர விளக்கை கடும் புயல் காற்றிலும் நாம் அணைந்துவிட அனுமதிக்கக் கூடாது. நமது அடுத்த கருத்து இந்திய விடுதலைக்காக இறப்பு வரை பரிசிற்கோ, புகழிற்கோ ஆசைப்படாமல் தன்னை வாங்கிய அர்ப்பணித்த வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் குறித்தேயாகும்.
அரசியல் பிரிவுகளால் பிரிந்துள்ள நமது சகோதர, சகோதரிகளையும் சுதந்திரத்தின்போது அதை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாதவர்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். அவர்களும், இங்குள்ள மற்றவர்களும் எது நடந்தாலும் அது அதிர்ஷடமோ, துரதிர்ஷ்டமோ அதை சமமாக பகிர்ந்து கொண்டவர்களே ஆவர்.
எதிர்காலம் நம்முன் இருக்கிறது. எங்கு நாம் பயணிக்கப் போகிறோம்? எதை நோக்கி நம் உழைப்பு இருக்கவேண்டும்? இந்தியாவிலுள்ள உழவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட சாமானியர்களுக்கு சுதந்திரமும், வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. வறுமையை ஒழிக்கவும், கல்வியறிவின்மையைப் போக்கவும், நோய்களை களையவுமான போராட்டத்தை தொடங்க வேண்டும். செழுமையான, ஜனநாயகத்தன்மை கொண்ட, முன்னேற்றமடையும் நாட்டை உருவாக்கி, சமூக, அரசியல், பொருளாதார நிறுவனங்கள் நியாயத்தை உறுதிபடுத்துவதோடு, ஒவ்வொரு ஆண் மற்றும் பெண் என அனைவருக்குமான முழுமையான வாழ்வை உறுதி செய்ய வேண்டும்.
நம் முன்னால் கடின உழைப்பு காத்திருக்கிறது. நமது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை நம்மில் யாருக்கும் ஓய்வேயில்லை. விதி நமக்கு என்ன நிர்ணயித்திருக்கிறது என்பதைக் காணும் வரை நாம் தொடர்ந்து முன்னேற வேண்டும். மிகச்சிறந்த நாட்டின் குடிமக்களாகிய தீரமும், முன்னேறும் எண்ணமும் கொண்ட நாம் உயர்ந்த நல்ல தரமான வாழக்கையை வாழ வேண்டும் .
நம் அனைவருக்கும் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்திய நாட்டின் பிள்ளைகளான அனைவருக்கும் சம உரிமைகள், சிறப்பு உரிமைகள், கடமைகள் என அனைத்தும் சமமாக உள்ளன. குழுவாதங்களை அல்லது குறுகிய சிந்தனைகளை என்றும் ஆதரிக்கவோ, ஊக்கப்படுத்தவோ கூடாது. குறுகிய சிந்தனைகளை கருத்தளவிலும் அல்லது செயல்பாட்டளவிலும் செயல்படுத்துகின்ற மக்களைக் கொண்டிருக்கிற நாடு சிறந்த நாடாக இருக்க முடியாது.
உலகிலுள்ள பல்வேறு நாடுகளுக்கும், வாழ்த்துக்களை இந்தியா தெரிவிப்பதோடு, அவர்களோடு ஒன்றிணைந்து அமைதி, சுதந்திரம், ஜனநாயகத்தை உறுதிப்படுத்த உழைக்கவுமான வாக்குறுதியையும் அளிக்கிறது.
நம் தாய்நாடான தொன்மையான, தனித்துவமான, இளமையான இந்தியாவிற்கு நம் வணக்கத்தை தெரிவித்துக்கொள்வதோடு, அவளுக்கான சேவையில் நம்மை அர்ப்பணித்துக்கொள்வோம்.
தமிழில்: வின்சென்ட் காபோ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*