#korakpurChildrenTragedy கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடாத வருத்தத்தில் யோகி!

கோராக்பூர்(உத்தர பிரதேசம்), பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதி இல்லாததால் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்திருக்கிறார்கள். இதில் சம்பந்தப்பட்ட மருத்துவத்துறையினர் மீது அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக தன் சொந்த செலவில் சில குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய கஃபீல் கான் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார். இந்த கொடுமைகள் போதாதென்று, நேற்று கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோயிலில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்திருந்தார்.

மாடுகளுக்கு இருக்கும் மரியாதை இந்திய குழந்தைகளுக்கு இல்லையா?

தலித்துக்கள் மீதான உ.பி முதல்வரின் பார்வை என்ன?  துர்நாற்றமற்ற தலித்துகள் மட்டுமே அனுமதி: யோகி]

கோராக்நாத் கோயிலின் தலைமை குருக்களாக இருந்தவர் யோகி, கடந்த சில வருடங்களாகவே அங்கு நடைபெறும் ‘கிருஷ்ண ஜெயந்தி’ விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். கோரக்பூருக்கு விமானத்தில் வந்து பூஜையை முடித்துவிட்டு சுதந்திர தின கொண்டாட்டத்துக்காக டெல்லி செல்வதுதான் அவரது திட்டமாக இருந்தது. ஆனால் நேற்று வானிலை நிலவரம் சரியில்லாததால், கோரக்பூர் விமான நிலையத்துக்கு விமானங்கள் மற்றும் ஹெலிஹாப்டர்கள் வருவது தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் அவர் ‘கிருஷ்ண ஜெயந்தி’ பூஜையில் கலந்துகொள்ள முடியவில்லை. கடந்த ஞாயிறு அன்று பத்திரிகையாளர்களை சந்தித்த யோகி ஆதித்யநாத், ‘கிருஷ்ண ஜெயந்தி’ விழா பெரிய அளவில் சிறப்பாக நடப்பதற்கு காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு கொடுத்து நம் இந்திய கலாச்சாரத்தை காக்க வேண்டும் என்று தெரிவித்தார். இத்தனை பலமான ஏற்பாடுகள் செய்திருந்த யோகியால் அங்கு செல்ல முடியவில்லை.

[803 பாலியல் வன்முறை, 729 கொலைகள்: யோகியின் இரு மாத ஆட்சி]

70-க்கும் அதிகமான குழந்தைகள் அரசாங்கத்தின் கவனக்குறைவால் உயிர் இழந்திருக்கிறார்கள். ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்த நிலையில் ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்த நிறுவனம் பல முறை கடிதம் எழுதியும் பணம் வழங்கப்படாதது வெளியாகி உள்ளது. முன்னதாக மூளை வீக்கமே குழந்தைகள் மரணத்திற்கு காரணம் என்று உ.பி முதல்வர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*