கருணாநிதி சிகிச்சை: புதிய காரணம் சொன்ன புதிய தலைமுறை!

தனியார் பேருந்துகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், பாஜகவின் கூட்டணியில் இருக்கும் இந்திய ஜனநாயக கட்சி என்ற அரசியல் கட்சி, என பல நிறுவனங்களை நடத்தி வரும் எஸ்.ஆர்.எம் நிறுவன உரிமையாளர் பச்சை முத்து துவங்கிய புதிய தலைமுறை தொலைக்காட்சி திமுக தலைவர் கருணாநிதியின் உணவுக்குழாய் மாற்றப்பட்டதற்கான காரணமாக ஒன்றை கூறியுள்ளது.

 
அவரை அடிக்கடி புகைப்படம் எடுப்பதற்காக உணவுக்குழாயை கழற்றி கழற்றி மாட்டியதால் அவருக்கு புண் ஏற்பட்டு விட்டது என்று கூறியது. இது திமுகவினரையும், கருணாநிதி குடும்பத்தினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.புதியதலைமுறை தொலைக்காட்சி பாஜக ஆதரவு ஊடகமாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு கடந்த பல மாதங்களாக பல்வேறு தரப்பினராலும் பொது வெளியில் ஒரு குற்றச்சாட்டாக முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் உள்நோக்கத்தோடு இந்தச் செய்தியை வெளியிட்டதா புதிய தலைமுறை என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.

 
உணவுக்குழாயை மாற்றியமைப்பது என்பது மருத்துவ விதி. மாற்றா விட்டால் சீழ் பிடித்து அதுவே புண்ணாகி விடும் என்பது இது போன்ற சிகிச்சைகளை மேற்கொண்டவர்கள் அத்தனை பேருக்கும் தெரிந்த உண்மை எஸ்.ஆர்.எம் நிறுவனம் நடத்தும் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவரிடம் இது பற்றி கேட்டிருந்தால் கூட அவர் இது பற்றி எடுத்துச் சொல்லியிருப்பார்கள் எனும் நிலையில், திமுக பிரமுகரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில்:-

 
“ தலைவர் கலைஞர் உணவுக் குழாய் மாற்றுவதற்காக இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு சற்றுமுன் வீடு திரும்பினார். காலையில் இதுகுறித்து செய்தி வ்ழங்கிய புதிய தலைமுறை செய்தியாளர் ‘ புகைப்படங்கள் எடுப்பதற்காக அவரது உணவுக் குழாய் அவ்வப்போது கழற்றி மாட்டப்பட்டதால்தான் அவரது தொண்டை புண்ணாகிவிட்டது’’ என்று குற்றம் சாட்டினார். இந்த தகவலுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? ஒரு சாதாரண மருத்துவ சிகிட்சைக்காக கருத்து சொல்ல பத்திரிகையாளர் ராதா கிருஷ்ணன் தொலைபேசியில் அழைக்கப்படுகிறார். அவர் இன்னும் ஒரு படிமேலே போய் ‘’ கலைஞர் நன்றாக இருப்பதை நேரலைக்காட்சியில் பார்க்க முடிகிறது. அவர் ஆம்புலன்சில் அல்ல, சொந்தக் காரில் வந்து போகிறார்..பிறகு ஏன் முரசொலி விழாவிற்கு அழைத்து வரப்படவில்லை?

 

.. அவர் ஏன் அறிவாலயத்திற்கு வருவதில்லை’’ என்று சந்தேகத்தைக் கிளப்புகிறார். கலைஞர் எங்கே எப்படி வரமுடியும் என்பதை மருத்துவர்கள்தான் தீர்மானிக்க முடியுமே தவிர ஊடக விமர்சகர்கள் அல்ல. மேலும் கலைஞரின் உடல் நலம் குறித்த அனைத்து தகவல்களும் வெளிப்படையாக மக்கள் முன்னால் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அவரை படம்பிடிக்க கிடைக்த்த சில நொடி அவகாசத்தில் அவர் குறித்த இத்தனை சந்தேகங்களை எழுப்புவது நியாமான செயல்தானா? ஜெயலலிதாவின் அப்போலோ மர்ம தின சின்ட்ரோமிருந்து ஊடகங்கள் இன்னும் வெளிவரவில்லை என்பது தெரிகிறது.”
Abdul Hameed Sheik Mohamed

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*