குழந்தைகள் மரணம்: எண்ணிக்கை குறைவுதான் என்கிறார் மத்திய விசாரணைக் குழு மருத்துவர்!

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆறு நாட்களில் 60-பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்சிஜன் குறைபாட்டால் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அதிகாரிகள் மறுத்த நிலையில் இப்போது மத்திய அரசு அமைத்த விசாரணைக் குழுவும் ஆக்சிஜன் குறைபாட்டால் குழந்தைகள் இறக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறது.

கோரக்பூர் குழந்தைகள் மரணத்தின் முழு அவலத்தையும் காண இங்கே க்ளிக்கவும்
நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக பதிலளித்த உபி முதல்வர் மூளை அளர்ச்சி குறைபாடு காரணமாக குழந்தைகள் இறந்ததாக கூறினார்.இது தொடர்பாக விசாரணை நடத்த உபி அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், மத்திய அரசும் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது அதில் சப்தார்ஜங் மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர் ஹரிஷ் செல்லாணி இடம் பெற்றிருந்தார். இது தொடர்பாக தி இந்து நாளிதள் வெளியிட்டுள்ள செய்தியில் டாக்டர் ஹரிஷ் செல்லாணி தனது விசாரணை அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க உள்ளார். ஹரிஷ்

செல்லாணி பேசும் போது “கடந்த ஒரு வருடமாக அங்கு நடந்த உயிரிழப்புகளை ஒப்பிடும் போது இந்த உயிரிழப்பு அதிகம் என்பது உண்மையாகாது. எங்களுக்கு கிடைத்த தகவல்கள், தரவுகளை வைத்து நாங்கள் ஆய்வு செய்ததில் கடந்த ஆண்டு நடந்த உயிரிழப்புகளை விட இந்த ஆண்டு நடந்தது குறைவுதான். அதே போல ஆக்சிஜன் குறைபாட்டால்தான் உயிரிழப்பு நடந்ததா என தெரியவில்லை.” என்று கூறியுள்ளார்.

 

உ.பி அரசு டாக்டர் கஃபீல் கானை பணி நிறுத்தம் செய்யும் அளவுக்கு அவர் என்ன தவறிழைத்தார்?
ஆனால் இந்திய மருத்துவக் கவுன்சில் தனது விசாரணைக் குழுவை கோரக்பூருக்கு அனுப்பியது. இந்திய மருத்துவக் கவுன்சில் தேசிய தலைவர் கே.கே. அகர்வால் பேசுகையில், “ஆக்சிஜன் பற்றாக்குறையால்தான் இந்த உயிரிழப்புகள் நேர்ந்ததா என்பது இந்திய மருத்துவர்களுக்கு தெரிய வேண்டும். இந்த விவகாரத்தில் விடை தெரியாத பல கேள்விகளுக்கு பதில் தெரிந்தாக வேண்டும்.ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளதாக ஏன் முன்கூட்டியே எச்சரிக்கப்பட வில்லை. ஆக்சிஜன் துண்டிக்கப்படும் அளவுக்கு அஜாக்கிரதையாக இருந்தவர்கள் யார்? அங்கு மருத்துவ அலட்சியம் இருந்ததா போன்ற பல கேள்விகளுக்கான விடைகளை மக்கள் முன் வைப்பதே எங்கள் நோக்கமாகும்” என்றார்.

 

உ.பி மாநிலத்தில் மாடுகளுக்கு 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை இருப்பது உங்களுக்கு தெரியுமா?
கோரக்பூர் சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை உருவாக்கியிருக்கும் நிலையில் பாஜக தலைவர்களும் உத்திரபிரதேச அரசு மருத்துவர்களும் ஆக்சிஜன் குறைபாட்டால் குழந்தைகள் இறக்கவில்லை என்கிறார்கள்.ஆனால் அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் செய்திகளோ அதனினும் வேறுபட்டதாக இருக்கிறது. கோரக்பூர் மரணங்கள் தொடர்பான உண்மைகள் இந்திய மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*