#BlueWhaleSuicideGame மூலமாகத்தான் எனது மகன் இறந்தான் – ஒரு பெண்ணின் கண்ணீர் #Video

[முதலில் இதை வாசிச்சிடுங்க  #BlueWhaleSuicideGame: உங்கள் குழந்தை தற்கொலை செய்து கொள்ளலாம்:எச்சரிக்கை!]

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் செய்யும் சேட்டைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள அவர்கள் அடம் பிடிக்கும் போது அமைதி படுத்த என பல பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வாக குழந்தைகளின் கையில் மொபைலை கொடுத்துவிடுகிறார்கள்.இதனால் கேம்கள் சமூகவலைத்தளங்கள் என பள்ளிப் பருவத்திலிருந்தே பல குழந்தைகள் இணையத்தை மிக எளிதாக கையாளக் கற்றுள்ளனர். அது எந்த அளவு குழந்தைகளுக்கு ஆபத்தானது என்றால் குழந்தைகளை தற்கொலை செய்து கொள்ளுமளவிற்கு தூண்டக்கூடியது என சமீபத்தில்தான் ஒரு ஆன்லைன் விளையாட்டின் மூலம் தெரியவந்துள்ளது.

#Blue_whale_suicide_game எனும் ஆன்லைன் விளையாட்டு வெறும் விளையாட்டல்ல. பல குழந்தைகளின் உயிரைப் பறித்துள்ளது இந்த விளையாட்டு. இன்னமும் பல உயிர்களை பறிப்பதற்காக இணையத்தில் வேகமாக பரவிவருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் தொடர் கட்டளைகளாகத்தான் இந்த விளையாட்டு இணையத்தில் பரவுகிறது. பிலிப் புடெகின் எனும் 22-வயது ரஷ்ய இளைஞர் உருவாக்கிய விளையாட்டுதான் #bluewhalesuicidegame. இணையத்தில் இதனை பாலோ செய்ப்வர்களுக்கு #bluewhalesuicidegame குழுவின் பொறுப்பாளர் தினம் ஒரு டாஸ்க் என 50 நாட்களுக்கு கொடுப்பார். கைகளை பிளேடினால் கிழித்து புகைப்படம் எடுப்பது, இரவு நேரங்களில் சைக்கோ மற்றும் பேய் திரைப்படங்களை பார்க்கச் சொல்வது என இப்படியாக தொடரும் டாஸ்க்குகளின் கடைசி நாளில் நீங்கள் தற்கொலை செய்து கொள்வீர்கள்

த்ரில்லாக இருக்கிறதே என இந்த மொபைல் டாஸ்கில் இணைந்து ரஷ்யாவில் மட்டும் 130 இளைஞர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள்.2013-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கேமின் ஆபத்தை அப்போது பலரும் அறிந்திருக்கவில்லை.

நீலத் திமிங்கலங்கள் தன்னை அழித்துக்கொள்ள கடற்கரை நோக்கி வந்து இறந்து போகுமாம், அதனால்தான் இதற்கு #bluewhale என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவில் மட்டும் வெகுவாக பரவியிருந்த இந்த தற்கொலை விளையாட்டு, மெல்ல மெல்ல பல்வேறு நாடுகளிலும் பரவியது. இதற்கு இந்தியா ஒன்றும் விதிவிலக்கல்ல, மும்பையை சேர்ந்த 14-வயது பள்ளி மாணவர் இந்த விளையாட்டால் தற்கொலை செய்திருக்கிறார்.

மஹாராஸ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த 14-வயது சிறுவன் #bluewhalesuicidegame குழுவில் இணைந்ததன் மூலமாக தற்கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மஹாராஸ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என தெரிவித்தார். மும்பை போலீஸார், இதுதான் இந்தியாவில் மொபைல் விளையாட்டால் நடந்த முதல் தற்கொலையா என்று விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒரு தாய் தனது மகன் இந்த விளையாட்டினால் தான் இறந்தான் என்று உறுதிப்படுத்தியுள்ளார். 16 வயதுமிக்க மனோஜ் எனும் அந்த சிறுவன் 2016லேயே இந்த விளையாட்டினைப் பற்றி அவரது தாயிடம் கூறியிருக்கிறார். இந்த விளையாட்டு சுவாரஸ்யமாக இருக்கிறது என்று அவரது தாயையும் விளையாடச் சொல்லிஇருக்கிறார். தற்கொலை செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு தனது தாயிடம் சென்று “நான் இறந்தால் அந்த துக்கத்திலிருந்து மீண்டு வந்துவிடுவீர்களா” என்றும் கேட்டிருக்கிறார் . இந்த தகவல்களால் அதிர்ச்சியடைந்துள்ள அரசு அதிகாரிகள் இந்தியாவில் இதுவரை இந்த விளையாட்டால் எத்தனை பேர் தற்கொலை செய்துள்ளனர் என தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை உதவியுடன் விசாரிக்கத் துவங்கியுள்ளனர். மேலும் இந்த விளையாட்டினை முற்றிலுமாக தடுக்கவும் வழிவகை செய்துகொண்டிருக்கின்றனர்.

இந்த விளையாட்டை உருவாக்கிய பிலிப் புடெகின், ரஷ்யாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 3 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை வழங்கியிருக்கிறது ரஷ்ய நீதிமன்றம். காரணம் நேரடியாக இவைகளை கொலைகள் என்றும் அந்தக் கொலைகளில் பிலிப் புடெகினுக்கு தொடர்பிருக்கிறது என்றும் நிரூபிக்க முடியவில்லை.

உளவியல் கல்வி முடித்த பிலிப் புடெகினிடம் இந்த விளையாட்டை உருவாக்கிய காரணம் என்ன? என்று கேட்டதற்கு “இந்த விளையாட்டின் மூலமாக வாழ தகுதியற்றவர்களை தற்கொலை செய்ய தூண்டுவேன்” என்று பதிலளித்துள்ளார்.

[உங்கள் குழந்தையை  #Blue_whale_suicide_gameலிருந்து காத்துக் கொள்ளும் வழிகள்]  

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*