உ.பியில் பசுவைக் கொன்றவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் பசுவை கொன்றவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்திருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிச்சிட்டு தொடருங்கள் : உ.பி.குழந்தைகள் மரணம் யோகி அப்பாவியா?

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தை பாஜக கட்சி ஆட்சி செய்து வருகிறது. அம்மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி வகித்து வருகிறார். அவர் பதவியேற்றதிலிருந்து அம்மாநிலத்தில் மனிதர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருந்து வருகிறது. பசுக்காவலர்களின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. மேலும் ஆண்ட்டி-ரோமியோ என்ற அமைப்பினர் காதலர்களை கொடுமைப்படுத்தி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான பாலிய வன்கொடுமை அதிகரித்திருக்கிறது. ஆனால் அம்மாநிலத்தில் பசுக்கள் மட்டும் பாதுகாப்பாக இருக்கின்றன. தனது மகனின் சடலத்தை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்கப்படாததால் தனது மகன் சடலத்தை ஒருவர் தானே சுமந்து சென்ற அவலம் அரங்கேறிய. அதே மாநிலத்தில்தான் மாடுகளுக்கு என குளிர்சாதன வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்தார் யோகி. சமீபத்தில்கூட கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியிலும் சோகத்திலும் உறையவைத்திருக்கிறது. ஆனால் இதுகுறித்து சிறிதும் அலட்டிக்கொள்ளாத யோகி ஆதித்யநாத் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்கு ஆயத்தமானார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

இதையும் படிச்சிருங்க : உ.பியின் உண்மை நாயகன் கஃபில் கான் பணி நீக்கம்!

இந்நிலையில்,  கடந்த ஜூன் மாதம் 24-ஆம் தேதி பசுக்களை கொன்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், முசாபர் நகர் மாவட்டத்தை சேர்ந்த கலீல், புரா மற்றும் இனாம் குரேஷி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, மாநில காவல்துறை தலைவர் சுல்கான் சிங் சுற்றறிக்கை ஒன்றை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி இருந்தார்.  அதில், பசுக்களை இறைச்சிக்காக கொல்வது, சட்டவிரோதமாக கடத்துவது போன்றவற்றில் ஈடுபடுவோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து முசாபர் நகரில் கைதான மூவரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரிய தர்ஷி தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் மீது மட்டுமே தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும்தான் மாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்திருக்கிறது. கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட பிஞ்சு குழந்தைகள் இறப்பதற்கு காரணமாக இருந்த மருத்துவமனை நிர்வாகம், அம்மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அதிகாரிகள், அந்த ஆக்சிஜன் நிறுவனம் என அனைவரையும் கண்டுகொள்ளாத யோகி அரசு மாட்டினை கொன்றவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை போட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தெரியுமா : #korakpurChildrenTragedy கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடாத வருத்தத்தில் யோகி!

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*